எபிரெயர், முதலாம் அதிகாரம் 57-0821 1. அளிப்பதற்கு ஒரு-ஒரு சிறு…எனக்கு வார்த்தையைக் காட்டிலும் மேலானது வேறொன்றுமேயில்லை என்றே நான் எண்ணுகிறேன். “விசுவாசம் கேள்வியினால் வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினால் வரும்.” 2 புதன் கிழமைகளில், ஒருக்கால் ஞாயிற்றுக் கிழமைகளில், ஞாயிறு ஆராதனைகளில் ஒன்றில் போதகருக்கு ஒரு சிறு ஓய்வினை அளித்தால் நலமாயிருக்கும், அது அவருக்கு மிகவும் ஏற்றதாயிருக்கும். அப்பொழுது நாம் வேதாகமத்தில் ஒரு புத்தகத்தை எடுத்து பிரசங்கிக்கலாம் என்று எண்ணினேன். நாம் வழக்கமாகவே முன்பு அதை செய்துள்ளோம், சில சமயங்களில் நாம் அதன் பேரில் ஒருவருடம் கூட தரித்திருந்திருக்கிறோம். 3 நாம் ஒரு சமயம் வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தின் பேரில் ஒரு வருடம் முழுமையாக தரித்திருந்ததை நான் நினைவு கூருகிறேன். ஆனால், ஓ, என்னே, நாம் கற்றுக்கொண்ட அந்தக் காரியங்கள், அவைகள் எவ்வளவு அற்புதமானவைகளாயிருந்தன! அதன்பின்னர் நாம் தானியேலின் புத்தகத்திற்கு திரும்பிச் சென்று, இல்லை ஆதியாகமப் புத்தகத்தை இல்லை யாத்திராகமத்தை எடுத்து, அதை அதிகாரத்திற்கு அதிகாரம் முழு வேதாகமத்துடன் இணைத்தோம். ஓ, நான் அதை விரும்புகிறேனே! 4 சற்று கழித்து நாம் எடுத்துக்கொள்ளப்போகிற…கர்த்தர் தொடர்ந்து ஆசீர்வதிப்பாரேயானால், நாம் தொடர்ந்து சென்று, நாம் இங்குள்ள சில உண்மையான ஆழமான காரியங்களுக்குள், உண்மையில் ஆழமானவைகளுக்குள் செல்லலாம். அப்பொழுது நாம் வேதவாக்கியங்களினூடாக, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அதனைக் கொண்டே செல்லலாம். 5 நான் வேதவாக்கியத்தை வேதவாக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறேன். அந்தவிதமாகத்தான் அது இருக்க வேண்டும். அது ஒரு மகத்தான அழகான காட்சியாயிருக்கிறது. நாம் ஆய்ந்து படித்துக் கொண்டிருக்கும் இந்த புத்தகத்தில், ஓ, நாம் இரட்சிப்பு, தெய்வீக சுகமளித்தல், அற்புதங்கள், இரக்கங்கள் போன்றவற்றை இதில் அறிந்துகொள்ளப் போகிறோம். ஓ, இங்கே ஒவ்வொரு காரியமும் இதற்குள் வெளிப்படுகிறது. 6 நான் கூட்டங்களுக்கு சென்றடைய வேண்டிய ஒரு ஸ்தலத்தினை அடையும்போது…நான் ஒரு கூட்டத்திற்கு செல்லப் போவதும், ஒரு கூட்டத்திற்கு அழைக்கப்பட போவதையுங் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது, ஏனென்றால் நான் ஒரு குறிப்பிட்டக் காரியத்தைச் செய்யும்படி வழிநடத்தப்படுவதை உணரும் வரையில் நான் எந்த ஒரு காரியத்தையும் தீர்மானிக்கிறதில்லை. ஒரு கால் காலைக்கு முன்பே, கலிபோர்னியாவிற்கோ, மெயின் என்ற இடத்திற்கோ அல்லது எங்காவது, அவர் என்னை எங்கே அழைக்கிறாரோ, அங்கு நான் ஆகாய விமானத்தில் பறந்து செல்லலாம். அந்தக் காரணத்தினால்தான் நான் பெரிய, நீண்ட பயணத் திட்ட விவரங்களை முன்னேற்பாடு செய்கிறதில்லை, ஏனென்றால் என்னால் அதைச் செய்ய முடியாது. என்னுடைய ஊழியம் அந்தவிதமாக இயல்பாக அமைவதில்லை, அதுவோ சற்று வித்தியாசமானதாயிருக்கிறது. 7 இப்பொழுது நான் சிறிது ஓய்வெடுப்பதற்காகவே இங்கே வீட்டிற்கு வந்துள்ளேன். நான் கடந்த கூட்டத்தில் இருபது பவுண்டுகள் எடை குறைந்து விட்டேன். சகோதரன் மெர்சியரும், சகோதரன் கோட் அவர்களும் சற்று முன்னர், “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நாங்கள் கவனித்தோம். நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு இதற்குள்ளாக செயல்படுகிறீர்கள்” என்றனர். 8 அதற்கு நான், “உங்களுடைய முழு பெலனையும், உங்களுடைய முழு ஆத்துமாவையும், உங்களுடைய முழு இருதயத்தையும், உங்களுடைய முழு சிந்தையையும், நீங்கள் பெற்றுள்ள ஒவ்வொரு காரியத்தையும், நீங்கள் பெற்றுள்ள எல்லாக் காரியத்தையும் கிறிஸ்துவுக்காக முன்னிலைப்படுத்தி செயல்படுத்துவதே நீங்கள் கர்த்தருக்காக சரியான விதமான ஒரு பணியைச் செய்ய முடிந்த ஒரே வழியாகும்” என்று கூறினேன். எந்தக் காரியத்தையாவது நீங்கள் செய்துகொண்டிருக்கும்போது, அதைச் சரியாகச் செய்யுங்கள் இல்லையென்றால் அதைச் செய்யவே செய்யாதீர்கள், பாருங்கள், அதனை அப்படியே விட்டு விடுங்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்க வேண்டுமென்றிருந்தால், அப்பொழுது உங்களுடைய நேரத்தை, உங்களுடைய திறமையை மற்றும் உங்களுடைய எல்லாக் காரியத்தையும், நீங்கள் கிறிஸ்துவுக்கென்று பெற்றுள்ள ஒவ்வொரு காரியத்தையும் முன்னிலைப்படுத்தி செயலாற்றுங்கள். 9 நான் சற்று முன்னர் இந்த வாலிப நபரைக் கவனித்தேன். சகோதரன் பர்ண்ஸ் (Burns), அது உங்களுடைய மனைவி, அப்படித்தானே, அந்த வாலிபத் தம்பதியினர் இசைக் கருவியை வாசித்துக் கொண்டும், பாடிக்கொண்டுமிருந்தனர். ஆனால் அது ஒரு கின்னரப் பெட்டியாயிருக்கவில்லை, மேலும் அது ஒரு இசைப் பேழையாயுமிருக்கவில்லை. ஆனால் அது ஒருவிதமான கருவியாய், அவர்கள் நரம்பிசைக் கருவியினை எடுத்து கர்த்தருக்காக வாசிக்கிறார்கள். உங்களால் அப்படி இசைத்துப் பாட முடிந்தால், அது ஆத்துமாக்களை ஆயத்தம்பண்ணும். கவலைப்படாமல் ஏதோ ஒரு காரியத்தைச் செய்யுங்கள். உங்களால்—உங்களால் சீட்டியடிக்க முடிந்தால், நல்லது, சீட்டியடியுங்கள். ஏதோ ஒரு காரியத்தைச் செய்யுங்கள். தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக சாட்சி பகருங்கள் அல்லது ஏதோ ஒன்றைச் செய்யுங்கள். நீங்கள் என்னவெல்லாம் பெற்றுள்ளீர்களோ அவைகளைத் தேவனுடையப் பணியில் உபயோகப்படுத்த அதனை முன்னிலைப்படுத்துங்கள். 10 இப்பொழுது, நாம் நீண்ட நேரம் தரித்திருக்கும்படி முயற்சிக்கப்போவதில்லை, ஏனென்றால் நான் உங்களுடையப் பணியினை அறிந்துள்ளேன். நீங்கள் அதிகாலையில் எழும்ப வேண்டும். நான் ஒவ்வொரு நாள் காலையிலும் அணில் வேட்டைக்காக சென்றுக் கொண்டிருக்கிறேன். நான் உங்களுக்கு உண்மையையே கூறுவேன். அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். நான் சற்று இளைப்பாறும்படிக்கே வீட்டிற்கு வந்துள்ளேன். ஆகையால் நான் ஏறக்குறைய நான்கு மணிக்கே எழுந்து, காட்டிற்குள்ளாகச் சென்று, சற்று நேரம் வேட்டையாடி விட்டு, உறங்கச் செல்வேன். எனவே நான் மீண்டும் கொஞ்சம் எடை கூடியுள்ளேன், ஆகையால் கொஞ்ச காலம் ஓய்வெடுத்துக்கொள்வேன், நீங்கள்…கர்த்தருக்குச் சித்தமானால், ஒவ்வொரு காரியமும் அருமையாக உள்ளது. 11 சரி, இப்பொழுது நாம் நம்முடைய வேதாகமங்களைத் திருப்பப் போகிறோம். நீங்கள் ஒவ்வொரு இரவும் உங்களுடைய வேதாகமத்தைக் கொண்டு வர வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அதாவது நீங்கள்…உங்களால் முடிந்தளவு…அதைக் கொண்டுவாருங்கள். யாராவது சிலரிடத்தில் வேதம் இல்லாமலிருந்து, அதே சமயத்தில் வாசிக்கும் பாகத்தைத் தொடர்ந்து பார்க்க வேண்டுமென்று விரும்பினால், நாங்கள் இங்கு சிலவற்றை வைத்துள்ளோம். எனவே நாங்கள் இங்கு வைத்துள்ளதை…வாயில்வரவேற்பாளர்களில் சிலர் அவைகளை எடுத்துக் கொடுங்கள். எவருக்கேனும் ஒன்று வேண்டுமா? நல்லது, உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். 12 சகோதரன்…டாக் (Doc) இங்கு வந்து, இந்த வேதாகமங்களைப் பெற்றுக் கொள்வாரா என்று வியப்புறுகிறேன். நீங்கள் அங்கே சகோதரன் பர்ண்ஸ் அவர்களுக்கு அருகில் நின்றுகொண்டுருக்கிறீர். சகோதரன் பர்ண்ஸ், அது சரிதானே? நான் அவர் ஏதோ கூறுவதைக் கேட்கிறேன்…[அந்த சகோதரன், “கான்ராட்” என்கிறார்.—ஆசி.] என்ன? [“கான்ராட்”] கான்ராட். நான் அவரைத்தான் கூப்பிட்டேன்…சகோதரன் நெவில், எனக்கு ஒருகால் சரியாக கேட்காமலிருக்கலாம். பர்ண்ஸ் என்ற பெயரை எப்படி நான் கூப்பிட்டேன்? நான் அந்த மனிதனுடைய முகத்தை அறிந்துள்ளேன், ஆனால் என்னால் அவருடையப் பெயரை சரியாகக் கூறி கூப்பிட முடியாமற் போயிற்று. 13 உங்களுக்கு சற்று வயதாகும்போது, உங்களுக்கேத் தெரியும். நான் ஒரு காரியத்தைக் கண்டறிகிறேன், அதாவது இந்த வேதத்தை வாசிப்பதோ எனக்கு கடினமாக உள்ளது. ஆயினும் நான் வேதத்தை வாசிப்பதற்காக மூக்குக் கண்ணாடி அணிந்துகொள்வதைக் குறித்து எண்ணிப் பார்ப்பதற்கே நான் வெறுப்புக் கொள்கிறேன். 14 ஆனால், அண்மையில் நான் குருடாகிக் கொண்டிருப்பதாக நானே எண்ணிக்கொண்டேன். எனவே நான் சாம் என்பவரைக் காணச் சென்றிருந்தேன். அப்பொழுது சாம் அவர்களோ, “பில், எனக்குத் தெரியவில்லை” என்று கூறிவிட்டார். மேலும், “நீங்கள் இதற்காக ஒரு சிறப்பு மருத்துவரைச் சந்திக்க நான் முன்னேற்பாடு செய்யவுள்ளேன்” என்று கூறினார். 15 எனவே நான் அதற்காக லூயிவில்லிற்குச் சென்றேன். அது கர்த்தருடைய சித்தமாய் இருந்திருந்திருக்க வேண்டும். ஒரு புகழ்வாய்ந்த சிறப்பு மருத்துவர்; நான் அவருடையப் பெயரை இப்பொழுது மறந்துவிட்டேன். ஆனால் அவரோ என்னுடைய புத்தகத்தைப் படித்திருந்தார். எனவே அவர், “நீங்கள் திரும்பவும் எப்போதாவது ஆப்பிரிக்காவிற்குச் செல்வீர்களேயானால், நான் உங்களோடு வர விரும்புகிறேன்” என்று கூறினார். மேலும் அவர், “உங்களை…அந்த ஆப்பிரிக்க மக்கள் உம்மை நேசிக்கிறார்கள் என்றும், அவர்கள் மிகவும் மூட நம்பிக்கையுள்ளவர்கள், விசேஷமாக ஒரு கத்தியினைக் கொண்டு கூட வெட்டிக்கொள்வார்கள்” என்றார். எனவே, “அவர்களுக்கு கண்படல அறுவை சிகிச்சைகள், மற்ற காரியங்களின் பேரிலானவற்றிற்காக நான் என்னுடைய வாழ்க்கையில்…ஊழியத்திற்கென்றே ஆறு மாத காலம் செலவிட விரும்புகிறேன்” என்று கூறினார். மேலும் அவர், “நாம் ஒன்று சேர்ந்து செல்லக் கூடுமானால், அப்பொழுது நீர் அவர்களை அநுகூலமாகவே ஆதாயம் செய்யக் கூடும். அவர்களுக்கு கண்படல நோய்கள், மற்றும் கண்சிகிச்சைகள் தேவைப்படுமாயின், நான் இலவசமாக ஆறுமாத காலத்திற்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க விருப்பங்கொண்டுள்ளேன்” என்றார். ஆனால் அதே சமயத்தில் நீங்கள் அவரை சந்திக்கும்படியான முன்னேற்பாடு செய்ய எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதையோ நான் மறந்துவிட்டேன். 16 நாங்கள் ஒரு சிறு அறையில் உட்கார்ந்துகொண்டிருந்தோம், அப்பொழுது அங்கே பின்னால் இருந்த இருட்டு அறையில் ஒரு சிறிய சிகப்பு விளக்கு போடப்பட்டிருந்தது. ஏன்? என்னால் அந்த எழுத்துக்களை வாசிக்க முடிந்தது. அப்பொழுது அது இருபதுக்கு—இருபது என்று கூறப்பட்டது. என்னால் அதை வாசிக்க முடிந்தது. அதன்பின்னர் அவர் அதை பதினைந்து—பதினைந்து என்ற அளவில் திடீரென்று மாற்றினார். அப்பொழுது அதையும் என்னால் வாசிக்க முடிந்தது. பின்னர் அது பத்துக்கு-பத்து என்ற அளவிற்கு மாற்றி வைக்கப்பட்டது. அப்பொழுதும் என்னால் அதையும் வாசிக்க முடிந்தது. எனவே அவர் “நல்லது, உங்களுடையக் கண்களில் அதிகப்படியான கோளாறு கிடையாது” என்றார். 17 அப்பொழுது அவர் ஒரு தூரதரிசினி கண்ணாடியை வைத்திருந்தார். உங்களுக்குத் தெரியுமா? அவர் அங்கே ஒரு சிறிய கருவியை, ஒரு சிறிய சாதனத்தை பின்னால் வைத்திருந்தார். அந்தப் பண்டைய தூரதரிசினி கண்ணாடிகள், அவைகளை எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? நாம் புகைப்படங்களை உற்று நோக்கிப்பார்க்க வழக்கமாக பயன்படுத்துவோம். எனவே அவர், “உங்களால் அதை வாசிக்க முடியுமா?” என்று கேட்டார். அதற்கு நான், “ஆம் ஐயா, முடியும்” என்றேன். அப்பொழுது அவர், “அதை எனக்காக வாசியுங்கள்” என்றார். 18 ஓ, அது ஏறக்குறைய அந்தவிதமான ஒரு முழு பத்தியாயிருந்தது. நான் அதை வாசிக்கத் துவங்கினேன். அப்பொழுது அவர் அதை அந்தவிதமாக தூரமாய் மெல்ல, மெல்ல இழுக்கத் துவங்கினார். அவர் கிட்டத்தட்ட இந்த அளவு ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு இழுத்தவுடன் நான் நிறுத்திவிட்டேன். அப்பொழுது அவர், “என்னால் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கூற முடியும், நீங்கள் நாற்பது வயதைக் கடந்துவிட்டீர்கள்” என்று கூறினார். அப்பொழுது நான், “ஆம், அது உண்மையே. நீண்ட வருடங்களுக்கு முன்னமே அதைக் கடந்துவிட்டேன்” என்றேன். 19 அதற்கு அவர், “நீங்கள் அதைக் கடந்து எவ்வளவு காலம் ஆயிற்று?” என்று கேட்டார். மேலும் அவர், “இயற்கையாகவே மானிடக் கண்ணானது, உங்களுக்கு நாற்பது வயதாகும்போது, உங்களுடையத் தலைமுடி நரையாக மாறுவது போல், உங்களுடையக் கண் விழியானது தட்டையாகிறது. இப்பொழுது, நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்களேயானால், அது மீண்டும் திரும்பி வரும்” என்றார். அவர் “அதை இரண்டாம் பார்வையென்று அவர்கள் அழைக்கிறார்கள். ஒரு மானிடனுக்கு ஏறக்குறைய நாற்பது வயதாகும் போது, அது உண்மையாகவே அவ்வாறு அவர்களுக்கு…உண்டாகும்” என்றும், “அப்பொழுது அவர்களுடைய கண்களில் எந்தவிதக் கோளாறும் இருக்காது” என்றும் கூறினார். 20 என்னிடத்திலிருந்து ஒரு முடி கீழே தரையிலே விழுந்து கிடக்குமேயானால், என்னால்—என்னால் அதைப் பார்க்க முடியும். ஆனால் எனக்கு அருகில் இருந்தால்…பின்னர் அவரோ, “இப்பொழுது நீங்கள் வேதாகமத்தை வாசியுங்கள் என்று கூறி, அதை உங்களிடத்திலிருந்து சற்று தூரமாகத் தள்ளி வைத்துப் படியுங்கள் என்றும், சற்று கழித்து நீங்கள் உங்கள் கரத்திற்கு எட்டாத தூரத்தில் வைத்து உங்களால் படிக்க முடிகிறதா என்றும் பாருங்கள்” என்றார். 21 ஆகையால் அவர் ஒரு மூக்குக் கண்ணாடியை எனக்கு ஆயத்தம் செய்து, அதனுடைய அடிப்பகுதியினால் உங்களால் வாசிக்க முடியும், அது வாசிப்பதற்காகவே என்றும் கூறினார். மேலும் அவர், “இப்பொழுது உங்களுடையப் பிரசங்க பீடத்திலிருந்தே…வாசிக்கலாம்” என்றார். உங்களுக்குத் தெரியுமா? அவர் என்னை இங்குள்ள மிக உயர்ந்த மதிப்பு வாய்ந்த பிரசங்கிமார்களில் ஒருவர் என்றே எண்ணிக்கொண்டார். எனவே…நீங்கள்…அந்தக் கண்ணாடியின் மேல் பாகம் வழக்கமாக பொருத்தப்படுகிற கண்ணாடியாயும், அதனுடைய கீழ் பாகம் ஒரு விதமாக அறுத்து, பிரிக்கப்பட்டு, நான் மிக நெருக்கமாக படிக்க முடிந்தளவு பொருத்தப்பட்டிருக்கிறது என்றும் கூறினார். உங்களுக்குத் தெரியுமா, நானோ அதை அணியவே வெறுக்கிறேன்; நான் வெறுக்கிறேன். 22 இப்பொழுது வேதாகம போதனையில் இன்றிரவு நான் புதிய ஏற்பாட்டுப் பகுதியை எடுத்துள்ளேன். எனவே இதுவோ…நான் காலின்ஸ் என்ற அச்சகப் பிரிவினரின் மூலம் அச்சிடப்பட்டதில் உள்ள புதிய ஏற்பாட்டு பகுதியையே வைத்துள்ளேன். இது நல்ல வடிவத்தில் உள்ள எழுத்துகளைக் கொண்டு அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் இப்பொழுது, எனக்கு மற்றொரு முறை திரும்பப் பார்வைக் குறைவு உண்டாகும்போது, நான்—நான் அந்தப் பழைய நண்பர்களிடமே சென்று, நன்கு வாசிக்கும்படியான ஒன்றை அவர்களிடமிருந்தேப் பெற்றுக் கொள்வேன். ஆனால் அது என்னவாயிருந்தாலும், என்னால் இன்னமும் படிக்க முடிந்த ஒன்றை நான் வைத்திருக்கிறபடியால் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் பெற்றுள்ளது எதுவாகினும், என்னால் முடிந்தளவு ஒவ்வொரு காரியத்தையும் தேவனுடைய மகிமைக்கென்று ஒவ்வொருவருக்கும் அளிக்கப் போகிறேன், எனவே அவர் அந்த முதுமை என்ற அறிகுறியையே நீக்கிப் போடுவார் என்று நம்புகிறேன். என்னுடைய முதுமையை அகற்றிப் போடும்படி என்னால் அவரிடம் கேட்க முடியாது. நான்…ஆம், அந்த ஒரு காரியத்தை நாம் யாவரும் பெற்றுக் கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். நாம் அதனூடாகச் செல்லத்தான் வேண்டும். நான் முன்பு இருந்ததைப் போன்று, இங்கு மேடையின் மேல் நிற்கிற ஒரு சிறு பையனாயிருக்கவில்லையென்பதையும் நான் அறிவேன். எனக்கோ நாற்பத்தெட்டு வயதாகிவிட்டது. சகோதரன் மைக் அவர்களே, சற்று யோசித்துப் பாருங்கள், இன்னும் இரண்டு வருடங்களில் ஐம்பது வயதாகிவிடும். 23 என்னே, என்னால் அதை நம்ப முடியவில்லையே! நான்…ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நான் அந்த இருபதை கடந்துவிட்டேன் என்பதை ஒருபோதும் நான் அறியாதிருந்தேன். அது உண்மை. அது சரியே. நான் வெறுமென…என்னால் அதை நம்ப முடியவில்லை. அதே சமயத்தில் என்னால்—என்னால்…அந்தக் கண்ணாடியில் நோக்கிப் பார்க்கும்வரையில் என்னால் அதை நம்பமுடியவில்லை. அதன்பின்னரே நான்—நான் அந்த முதுமையை அறிந்துகொண்டேன். ஆனால் நான் வாழ்க்கையில் எப்போதும் உணர்ந்ததைப் போன்று அவ்வளவு நன்றாக இருப்பதை உணர்வது போன்றே காணப்படுகிறேன். நான் அதற்காகவும் கூட நன்றியுள்ளவனாயிருக்கிறேன். எல்லாத் துதியும் தேவனுக்கே உண்டாவதாக. 24 இப்பொழுதோ, நாம் எபிரேயரின் புத்தகத்தையே ஆய்ந்து படித்துக்கொண்டிருக்கிறோம். அது…இருந்து வருகிறது. ஓ, அது வேதாகமப் புத்தகங்களிலேயே மிகவும் ஐஸ்வரியமான ஒன்றாயும், மிக ஆழமான ஒன்றாயும் உள்ளது. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உண்மையாகவே இந்தப் புத்தகம் ஒரு…தேவன் அனுமதிப்பாரேயானால், நாம் இந்தப் புத்தகத்தில் பெற்றுக்கொள்ளப் போவதென்னவென்றால், நாம் எல்லா நேரத்திலும் தேவனுடையத் துதிகளைக் கூறி ஆரவாரமிடுமளவிற்கு நாம் தங்கக் கட்டிகளைக் கண்டறிவோம் என்றே நான் நம்புகிறேன். இப்பொழுது நான்… 25 உண்மையாகவே எபிரேயப் புஸ்தகம் என்னவாயிருக்கிறதென்றால், அது வேதாகமப் பொருளைத் தெளிவாக விளக்குபவரான மகத்தான பரிசுத்த பவுலினால் எழுதப்பட்டது என்று எண்ணப்படுகிறது. நம்முடையக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு அடுத்தபடியாக இந்த உலகம் பெற்றுள்ள மிகச் சிறந்தவர் அவரே என்று நான் யூகிக்கிறேன். பவுல் பழைய ஏற்பாட்டிலிருந்து அதை வேறுபிரித்துக் கொண்டிருந்தான்…இப்பொழுது பவுல் உண்மையாகவே ஒரு வேத ஆசிரியராய் இருந்தான். அப்பொழுது பழைய ஏற்பாட்டு புத்தகம் மாத்திரம் எழுதப்பட்டு, வேதம் என்றழைக்கப்பட்டது. எனவே அவன் பழைய ஏற்பாட்டை வேறுபிரித்து, பழைய ஏற்பாடு ஒரு நிழலாயிருப்பதையும் அல்லது புதிய ஏற்பாட்டிற்கு ஒரு மாதிரியாயிருப்பதையும் எபிரேயர்களுக்கு காண்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். 26 நாம் ஒரு கருத்தின் பேரில் சரியாக அங்கேயே மூன்று மாதம் வீட்டிலேயே தங்கி தியானிக்க முடியும். நம்மால் இப்பொழுது நம்முடைய வேதாகமங்களில் திரும்பிச் சென்று பார்க்க முடிந்தால் நலமாயிருக்கும், உண்மையாகவே நாம் எபிரேயர் முதலாம் அதிகாரத்தின் பேரில்தான் இருக்கிறோம். ஆனால் நாம் வெளிப்படுத்தின விசேஷம் 12-ம் அதிகாரத்திற்குத் திருப்புவோமேயானால், எப்படி பழைய ஏற்பாடு நிழல்களாய் உள்ளன என்பதை நீங்கள் மீண்டும் அதைச் சரியாகக் காணலாம். நீங்கள் உங்களுடையப் பென்சில்களை வைத்துக்கொண்டு, வேதவாக்கியங்களை குறித்துக் கொள்ளப் போவதாயிருந்தால் நலமாயிருக்கும். எபி… 27 வெளிப்படுத்தின விசேஷம் 11-ம் அதிகாரத்தில் ஒரு ஸ்திரீ வானத்தில் நின்று கொண்டிருந்தாள் என்றும், அவள் சூரியனை அணிந்திருந்தாள் என்றும், அவள் பாதங்களின் கீழே சந்திரன் இருந்தது என்பதையும் யோவான் பத்மூ தீவில் இருந்தபோது கண்டான் என்பதை நாம் கண்டறிகிறோம். அந்த ஸ்திரீ பிரசவ வேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள். அவள் ஒரு ஆண்பிள்ளையைப் பெற்றெடுத்தாள். அந்தப் பிள்ளைப் பிறந்தவுடனே, அதைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது. அந்தப் பிள்ளை பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த ஸ்திரீயானவள் வனாந்திரத்திற்கு ஓடிப்போனாள். அங்கே அவள் ஒரு காலமும், காலங்களும், அரைக் காலமுமாக அல்லது பாதிக்காலம் போஷிக்கப்பட்டாள். 28 இப்பொழுது ஸ்திரீயானவள் சபைக்கு பிரிதிநிதித்துவமாய் இருந்தாள், அவள் பெற்றெடுத்தப் பிள்ளையோ கிறிஸ்துவாய் இருந்தது. அவளுடையப் பாதத்திற்கு கீழேயிருந்த சந்திரனோ நியாயப்பிரமாணமாயிருந்தது, அவள் தலையில் அணிந்திருந்த சூரியனோ கிருபையாயிருந்தது. அவளுடைய கிரீடத்தில் இருந்த பன்னிரெண்டு நட்சத்திரங்கள் பன்னிரண்டு அப்போஸ்தலர்களாய் இருந்தனர். அங்கேதான்,…பன்னிரெண்டு அப்போஸ்தலர்கள் மகிமையாய் இல்லை புதிய ஏற்பாட்டின் கிரீடமாய் இருந்தனர். புரிகிறதா? “போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமேயல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போடக் கூடாது.” புரிகிறதா? புதிய ஏற்பாட்டின் அஸ்திபாரமாகிய அப்போஸ்தலர்கள், அப்போஸ்தல உபதேசங்கள் போன்றவையே புதிய ஏற்பாட்டின் ஆதார கீரீடமாக உள்ளது. அதன்பின்னர்… 29 சந்திரன் சூரியனின் நிழலாய் உள்ளது. சூரியன் பூமியின் பின்னிருக்கும்போது தன்னுடைய ஒளியைத் தருகிறது. சந்திரனோ இரவில் நடந்து செல்லும்படியான ஒளியைத் தருகிறது. நாம் இங்கே என்ன ஒர் அழகான காட்சியைப் பெற்றுள்ளோம், மற்றொரு அழகான காட்சி: சூரியன் கிறிஸ்துவையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது; சந்திரனோ சபையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அவைகள் கணவனும் மனைவியையும் போன்றிருக்கின்றன. கிறிஸ்து இல்லாத நேரத்தில், சபையானது கொஞ்சம் ஒளியை, சுவிசேஷத்தை பிரதிபலிக்கிறது. சூரியன் மீண்டும் உதயமாகும் வரை அது நடப்பதற்குரிய வெளிச்சமாய் உள்ளது. ஆகையால் சபையும் குமாரனும் போல சூரியனும் சந்திரனும் ஒன்றாய் கலந்துள்ளன. பார்த்தீர்களா? சந்திரன் சூரியனின் ஒரு பாகமாயிருக்கிறது, சபை கிறிஸ்துவின் ஒரு பாகமாயிருக்கிறது. கிறிஸ்து இல்லாமலிருக்கும் போது, சபையானது அவருடைய ஒளியைப் பிரதிபலிக்கிறது. ஆகையால் சந்திரன் பிரகாசிப்பதை நாம் காணும்போது, நிச்சயமாகவே சூரியன் எங்கோ பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்பதையே அது தெரிவிக்கிறது. சபையானது கிறிஸ்துவின் ஒளியைப் பிரதிபலித்துக்கொண்டிருக்கிற வரையில், கிறிஸ்து எங்கோ ஜீவனோடிருக்கிறார். ஆமென். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். 30 இப்பொழுது, நியாயப்பிரமாணமோ கிருபைக்கு ஒரு மாதிரியாய் இருந்தது, ஆனால் நியாயப்பிரமாணமானது அதில் இரட்சிக்கும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை. நியாயப்பிரமாணம்…மாத்திரம்…நியாயப்பிரமாணம் ஒரு காவல்காரனாயிருந்தது. அது உங்களை சிறைச்சாலைக்குள்ளாகப் போடுகிற காவல்காரனாய் அது இருந்தது, ஆனால் நீங்கள் பாருங்கள், உங்களை அந்தச் சிறைச் சாலையிலிருந்து வெளியே எடுக்க கிருபை தேவைப்பட்டது. புரிகிறதா? 31 ஆகையால் கிறிஸ்துவின் இரத்தம், சுவிசேஷம், நம்மை பாவத்திலிருந்து விடுவிக்கிறது. நியாயப்பிரமாணம் நம்மை பாவிகளாக்குகிறது. நியாயப்பிரமாணமோ, “நீ ஒரு பாவி, திருடாதிருப்பாயாக. விபச்சாரம் செய்யாதிருப்பாயாக. பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக” என்று மாத்திரமே கூறிற்று பார்த்தீர்களா? அதுவோ நீ தவறாயிருக்கிறாய் என்றும், நீ குற்றவாளியாயிருக்கிறாய் என்றும் கூறுகிற ஒரு காவல்காரானாயிருக்கிறது. ஆனால் சுவிசேஷமோ நற்செய்தியாய் இருக்கிறது. நம்முடைய தப்பிதங்களிலிருந்தும், நியாயப்பிரமாணத்தின் மீறுதல்களிலிருந்தும் நம்மை இரட்சிக்கவே கிறிஸ்து மரித்தார். நம்மை மீட்டெடுக்கவே கிறிஸ்து மரித்தார். 32 இப்பொழுது, பவுல், அவன் மனமாற்றமடைந்தவுடன், அவன் எந்த வேதசாஸ்திர பள்ளிக்கும் சென்று ஒருபோதும் கலந்தாலோசிக்கவேயில்லை, மற்றெந்த ஊழியர்களிடத்திலும் கலந்தாலோசிக்கவேயில்லை. ஆனால் நீங்கள் கவனித்துப் பார்த்தீர்களா? அவன் அரபு தேசத்திற்கு சென்று, அங்கே அரேபியாவில் மூன்று வருடங்கள் இருந்தான். இப்பொழுது, இது என்னுடைய அபிப்பிராயமாயுள்ளது, அதாவது… 33 இப்பொழுது நாம் இதைக் குறித்த ஒரு பின்னணியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதே நாம் அது எப்படிப்பட்ட உண்மையாயிருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம். இன்றிரவு முதல் பாடமாக நாம் நம்முடைய பின்னணியைப் பற்றி எடுத்துக் கொள்வோம். 34 இப்பொழுது, பவுல் அப்பேர்ப்பட்ட ஒரு வேத ஆசிரியராய் இருந்தான், ஏனென்றால் அவன் மகத்துவமும், எல்லா நேரத்திலும் புகழ்பெற்று விளங்கிய கமாலியேலின் கீழே கற்பிக்கப்பட்டிருந்தான். அவன் அந்த நாளில் அறியப்பட்டவர்களில் மிகச் சிறந்த ஒருவனாய் இருந்தான், அவன் நியாயப்பிரமாணம் மற்றும், தீர்க்கதரிசிகளின் மகத்தான ஆசானாய் விளங்கினான். ஆகையால் பவுல் அந்தக் காரியங்களில் நன்கு பயிற்றுவிக்கப்பட்டிருந்தான். 35 எனக்கு அவனை இந்தவிதமாகப் பிடிக்கும், இந்த மகத்தான வெளிப்பாட்டைத் தன்னுடைய இருதயத்தில் உத்தமமாய் உடையவனாயிருந்தான். மேலும் அவன் ஒரு கொலைகாரனாய், ஸ்தேவானுடைய மரணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தான். ஸ்தேவான் கல்லெறியுண்டு மரிப்பதைக் கண்டிருந்தான். ஸ்தேவான் தன்னுடையக் கரங்களை வானத்தை நோக்கியவாறு உயர்த்தி, “வானங்கள் திறந்திருக்கிறதை நான் காண்கிறேன் என்றும், இயேசுவானவர் தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்கிறதையும் நான் காண்கிறேன்” என்றும் கூறினபோது, அது அடுத்தபடியாக பவுலைப் பிடித்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவன், “பிதாவே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தை சுமத்தாதிரும்” என்றான். பின்னர் அவன் நித்திரையடைந்தான். 36 நீங்கள் அதைக் கவனித்தீர்களா? அவன் ஒருபோதும் மரிக்கவில்லை. அவன் நித்திரையடைந்தான். அதாவது இவ்விதமாக…அடுத்தடுத்து எறிந்த கற்களின் வேதனையை அவன் உண்ர்ந்திருப்பான் என்று நான் நம்பவில்லை. அவனோ தன்னுடையத் தாயின் மடியிலிருந்த ஒரு குழந்தையைப் போல நித்திரையாயிருந்தான், ஸ்தேவான் தேவனுடையக் கரங்களில் நித்திரையடைந்தான். 37 பவுலைக் குறித்த ஏதோ ஒன்று உண்டாயிருந்தபடியால், அது அவனை அடுத்தபடியாகப் பற்றிக் கொண்டது. அதன்பின்னர் அவன் அதனை எதிர்த்து போரிடுகிற எந்த மனிதனையும் குற்றவாளியென நிர்ணயித்து தண்டனை வழங்க, பிராதன ஆசாரியரிடத்திலிருந்து சில கடிதங்களைப் பெற்றிருந்தான். மேலும், “அந்த சத்தமிட்டுக்கொண்டிருக்கிற எல்லா ஜனங்களையும், அந்த முரண்பாடான கொள்கைகளையுடைய வேதபுரட்டர்களையும் நான் கைது செய்வேன்”, என்று கூறியிருந்தான். அவர்கள் அவ்வாறு கருதப்பட்டனர். நாம் இன்றைக்கு அப்படிப்பட்டவர்களை என்னவென்று அழைக்கிறோமென்றால், “தீவிர மதவெறியர்” அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்றாக அழைக்கிறோம். அதாவது அதிகமாக சத்தமிட்டு, குழப்பத்தை உண்டுபண்ணுகிறவர்கள் என்று அழைக்கிறோம். எனவே “நாம் அங்கு சென்று, அதை சரி செய்வோம்” என்கிறோம். 38 அவன் தன்னுடைய ஒரு சிறு பண்டையப் பாதையில் சென்று கொண்டிருந்தான்…நாம் பயணிப்பது போன்ற பெரிய நெடுஞ்சாலையில் அல்ல. பாலஸ்தீனாவில் அந்தப் பாதைகள் அவ்வாறிருந்தன, அதாவது காடுகளில் கால் நடைகள், பசு, ஆடுகள், குதிரைகள், கழுதைகள் மற்றும் ஓட்டகங்கள் மலைகளின் மேலேறிச் செல்லுகிற வழிதடத்தைப் போன்ற சிறு பாதைகள் இருந்தன. 39 ஒரு நாள் மதிய வேளையில் பவுல் தன்னுடையப் பாதையில் தமஸ்குவிற்கு சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெரிய பிரகாசமான வெளிச்சம் அவனைத் தாக்கி கீழே தரையிலே விழத் தள்ளிற்று. பவுலைத் தவிர வேறுயாரும் அதைக் காணவில்லை. நீங்கள் அதைக் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது இங்கே இது தனிப்பட்டதல்ல, ஆனால் நாம் இந்தப் பின்னணிக்குள்ளாக முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். எனவே அது அதே மாறாத இயேசு என்பதை…நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 40 இப்பொழுது, அவர் இங்கே பூமியின் மேலிருந்தபோது, “நான் தேவனிடத்திலிருந்து வந்தேன். நான் மீண்டும் தேவனிடத்திற்குப் போகிறேன்” என்றார். 41 இப்பொழுது, அவர் இஸ்ரவேல் புத்திரரை வழி நடத்தினபோது, அவர் அக்கினி ஸ்தம்பமாய் இருந்தார். அவர் மாம்சமானார். அதன்பின்னர் அவர் மீண்டும் அதே அக்கினி ஸ்தம்பத்திற்கு திரும்பிச் சென்றார். அவர் பவுலை தமஸ்குவிற்குப் போகும் வழியில் சந்தித்தபோது, அவர் அந்த அக்கினி ஸ்தம்பமாய், அந்த ஒளியாய், பாருங்கள், ஒரு மகத்தான ஒளியாய் இருந்தார். பவுல், “நான் துன்பப்படுத்துகிறதாக கூறுகிற நீர் யார்?” என்று கேட்டான். 42 அதற்கு அவரோ, “‘நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே,’ அந்த ஒளியே” என்றார். ஓ, அவர் அற்புதமானவரல்லவா? [சபையோர், “ஆம்” என்கின்றனர்—ஆசி.] 43 அவர் இன்றிரவு இங்கே நம்மோடு இருக்கிறார். அவருடையப் புகைப்படம் அங்கே எடுக்கப்பட்டது, அதேக் காரியம், பாருங்கள், அக்கினி ஸ்தம்பம், ஒளி, அவர் இருந்தவிதமாகவே இன்றைக்கும் “நேற்றும் இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்”. 44 அவனோடிருந்த மனுஷரோ அந்த ஒளியைக் காணவில்லை, ஆனால் அது அதே விதமாக அங்கே இருந்தது. அதேப் பலன்களைத் தருகிறது. 45 இப்பொழுது யாரேனும் இந்தக் கட்டிடத்தில் கிறிஸ்துவை காண முடியுமா? எவருமே அவரைக் காண முடியாதே? நிச்சயமாக, அதுதான் அங்கே சம்பவித்தது. 46 ஒர் இரவு பேதுரு சிறைச்சாலையிலிருந்தபோதுகூட அதுவே சம்பவித்திருந்தது. அந்த ஒளி சிறைச்சாலைக்குள் வந்து, பேதுருவைத் தொட்டு எழுப்பி, உட்புற காவலர் பக்கத்தில் நடக்கச் செய்து, வெளிப்புற காவலர் அருகே நடக்கச் செய்து, வாசலண்டை நடக்கச் செய்து, பிரதான வாசலையும், நகர வாசலையும் கடந்து போகும்படிக்குச் செய்தது. பேதுருவோ, “நான் சொப்பனங் கண்டு கொண்டிருக்க வேண்டும்” என்றான். ஆனால் அவன் சுற்றும் முற்றும் பார்த்தபோது, அந்த ஒளியானது போய்விட்டிருந்தது; கிறிஸ்துவே, அந்த நித்திய ஒளி, அதோ அவர் இருக்கிறார். இப்பொழுது வீதியிலே… 47 கவனியுங்கள், நாம் இதைக் குறித்துப் பேசுகிறபடியால், மற்றொரு காரியம் அப்படியே என் சிந்தைக்கு வந்துள்ளது. ஆனால் கிழக்கத்திய தேசமான இந்தியாவிலிருந்து வந்த வானசாஸ்திரிகள் மாதங்களாக பள்ளத்தாக்குகளினூடாகவும், வனாந்திரங்களினூடாகவும் கடந்து அந்த நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து வந்தனர். அந்த நட்சத்திரமோ (எல்லா வானிலை ஆய்வுக் கூடங்களையும் கடந்து சென்றது; அந்த நாட்களில் அவர்கள் நட்சத்திரங்களைக் கொண்ட இரவு நேரத்தை கணக்கிட்டனர்) ஆயினும் எந்த சரித்திரகாரனுமே அல்லது வேறு யாருமே இந்த வான சாஸ்திரிகளைத் தவிர அந்த நட்சத்திரத்தை ஒருபோதும் குறிப்பிட்டுக் கூறினதேயில்லை. அவர்கள் அதைக் காணும்படிக்கே அது சுட்டிக் காட்டப்பட்டதாயிருந்தது. 48 ஆகையால் நீங்கள் காண்கிற காரியங்களை மற்ற நபர் காணாமலிருக்கலாம். உங்களுக்கோ அது ஒர் உண்மையாயிருக்கிறது. அவர்கள் அதைப் புரிந்துகொள்ளுகிறதில்லை. ஒரு மனமாற்றதைப் போன்றே, நீங்கள் மனமாற்றமடைந்து, தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்ந்து, தேவனுடைய ஆசீர்வாதங்களை அப்படியே பருக முடியும். உங்களுக்கு அடுத்துள்ள நபரோ, “நான் ஒரு காரியத்தையும் காணவில்லையே” என்று கூறுவான். பார்த்தீர்களா? புரிகிறதா? அதுதான் அது. அதாவது, “நான் அதைப் புரிந்து கொள்ளவில்லை. அது எதைக் குறித்தது என்றே நான் புரிந்துகொள்ளவில்லை” என்பான். நல்லது, அவன் அதை சற்றேனும் புரிந்து கொள்ளவில்லை. அவ்வளவுதான். அங்குதான் உங்களுடைய காரியமே உள்ளது. 49 இப்பொழுது கவனியுங்கள், பவுல் தன்னுடைய பாதையில் சென்று கொண்டிருந்தான். இந்தப் பெரிய அனுபவம் அவனுக்கு சம்பவித்தவுடனே…இப்பொழுது, அவன் திருப்தியடையவில்லை…இப்பொழுது அதுவே பவுலை மிகச் சிறந்தவனாக்குகிறது. 50 இன்றிரவிற்கான நம்முடையப் பாடம் ஆழமானதல்ல. அது ஒரு மேலோட்டமான ஒரு பாடமாகவே உள்ளது. ஆனால், ஓ, சற்று கழித்தோ நாம் அதை ஆழமாகப் பார்க்கவுள்ளோம். ஆனால் இதுவோ மிகவும் மேலோட்டமான ஒரு பாடமாகவே உள்ளது, ஆனால் இது வெறுமென துவக்கமாயுள்ளது. அதே சமயத்தில் ஒரு காரியம் என்னவென்றால், அது இயேசு கிறிஸ்துவை உயர்த்துகிறதாயுள்ளது. பவுல் துவங்குகிறான். 51 பவுல் இதைச் செய்வதற்கு முன்னரே, அவன் ஒரு வேத பண்டிதனாய் இருந்தார். ஒரு வேதபண்டிதன் ஒருபோதும் தன்னுடையக் கோட்பாட்டை அனுபவங்களின் மேல் ஆதாரப்படுத்தமாட்டான். இல்லை ஐயா. அவர்கள் ஒருபோதும் தங்களுடையக் கோட்பாட்டை அனுபவத்தின் மேல் ஆதாரப்படுத்தமாட்டார்கள். உங்களால் ஒருவிதமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும். ஆனால் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாய் இருக்கவேண்டும். உண்மையே. 52 இப்பொழுது, பழைய ஏற்பாட்டில் அவர்கள் ஒரு செய்தியை அறிந்துகொள்ளக் கூடிய மூன்று வழிகளை உடையவர்களாயிருந்தனர். முதலாவது, நியாயப்பிரமாணம், அது நியாயப்பிரமாணமாயிருந்தது. அதன்பின்னர் அவர்கள் ஒரு தீர்க்கதரிசியை உடையவர்களாயிருந்தனர். ஒரு சொப்பனக்காரன்; அவர்கள் ஊரீம் தும்மீமை உடையவர்களாயிருந்தனர். இப்பொழுது அது சற்று ஆழமானதாயிருக்கலாம். 53 ஊரீம் தும்மீம் என்பது ஆரோன் தன்னுடைய மார்பில் அணிந்திருந்த மார்ப்பதக்கமாயிருந்தது. அதில் பன்னிரெண்டு கற்கள் இருந்தன; வச்சிரக்கல், பதுமராகம், மாணிக்கம் போன்றவைகளாகும். அவை மார்ப்பதக்கத்திலிருந்த பெரிய பன்னிரண்டு கற்களாய் இருந்தன. எனவே அது ஒவ்வொரு கோத்திரத்திற்கும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்குமே அவன் பிரதான ஆசாரியனாயிருந்தான் என்பதையே காண்பிக்கிறது. இந்த மார்ப்பதக்கம் சபையில் இருந்த ஒரு தூணில் தொங்கவிடப்பட்டிருந்தது. ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தபோது, அது சரியா அல்லது தவறா என்று நிச்சயப்படுத்திக்கொள்ள அது அவர்களுக்கு தேவைப்பட்டது. தீர்க்கதரிசிகள் அல்லது சொப்பனக்காரர்கள் இந்த ஊரீம் தும்மீம் முன்னால் நின்று, அவன் தன்னுடைய சொப்பனத்தையோ அல்லது அவனுடைய தரிசனத்தையோ, அவன் என்னக் கண்டானோ அதை அவன் கூறினான். அப்பொழுது அந்தப் புனிதமான ஒளி அதிலிருந்து எழும்புமேயானால்,…ஓ, உங்களுக்கு அது புரிகிறதா? தேவன் எப்பொழுதுமே இயற்கைக்கு மேம்பட்ட மண்டலத்தில் வாசம்பண்ணினார். எல்லாக் கற்களிலிருந்தும் ஒன்று திரண்டு எழும்புகிற அந்த ஒளியானது, இந்தச் சத்தம் புறப்பட்டு செல்லும் வரைக்கும் அந்தக் கற்கள் சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால் சத்தமானது அந்தக் கற்களில் பட்டவுடனே, அது இயற்கைக்கு மேம்பட்டதாயில்லாமலிருந்தால், அந்த மார்ப்பதக்கம் செயலற்ற முறையில் இருக்கும். ஆனால் அந்தச் சத்தம் இயற்கைக்கு மேம்பட்டதாயிருந்தால், அந்த ஒளிகள் ஒன்று சேர்ந்து வானவில் நிறத்தை பிரதிபலிக்கும். ஆமென். அப்பொழுது அதுவோ, “அது என்னுடைய தீர்க்க்தரிசி.அந்தச் சொப்பனம் என்னிடத்திலிருந்து வந்தது” என்று தேவன் பேசுகின்றதாயிருந்தது. அவர்கள் அதை ஊரீம் தும்மீம்மின்படியே நியாயந்தீர்த்தனர். 54 சவுல் பின்மாற்றமடைந்த போது நினைவிருக்கிறதா? அப்பொழுது அவன் எந்த ஒரு சொப்பனத்தையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறினான். தீர்க்கதரிசி சாமுவேலும் மரித்துப் போயிருந்தார், எனவே வேறு வழியே இல்லாதிருந்தது. எனவே சவுல், “ஊரீமினாலாவது எனக்கு உத்தரவு அருளவில்லை” என்று கூறினான். ஒரு மறு உத்தரவுமில்லாதிருந்தது. சவுல் ஊரீம் முன்பாக நின்றான், அவனுடைய வார்த்தைகள் மரித்துப்போனவைகளாகவே இருந்தன. புரிகின்றதா? தேவன் அவனை புறக்கணித்துவிட்டார். அந்த ஊரீம் தும்மீம் ஆரோனுடைய ஆசாரியத்துவத்தின் ரூபகாரப்படுத்துதலாய் இருந்தது. ஆரோன் மரித்த பிறகு, மோசே, அந்த மார்ப்பதக்கம் தூணிலே தொங்கிக்கொண்டிருந்தது. 55 இயேசு மரித்தபோது ஆரோனுடைய ஆசாரியத்துவம் நிறுத்தப்பட்டது. இப்பொழுது கிருபையிலிருந்து நியாயப்பிரமாணாம் வேறுபிரிக்கப்பட்டது. ஆனால் நாமோ இன்னமும் ஒரு ஊரீம் தும்மீமைப் பெற்றுள்ளோம். பவுல் அதை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தான். பார்த்தீர்களா? இன்றைக்கும் ஊரீம் தும்மீம் என்பது தேவனுடைய அழிவில்லாத, நித்திய வார்தையாகும். புரிகிறதா? 56 “இந்தப் புஸ்தகத்திலிருந்து யாராகிலும் எதையாவது எடுத்துப்போட்டால், அல்லது அதனோடு எதையாகிலும் கூட்டினால்”. எனவே இதற்கு புறம்பேயிருக்கிற எந்தக் காரியமும் எனக்கு வேண்டாம், ஆனால் இதில் உள்ள யாவையும் எனக்கும் வேண்டும். அந்த விதமான சபைதான் நமக்குத் தேவை. எல்லாக் காரியங்களுமே வார்த்தையினால் நிரூபிக்கப்பட வேண்டும். 57 அந்தக் காரணத்தினால்தான் நான் அண்மையில் பெந்தேகோஸ்தே ஜனங்களுக்கு மத்தியில் உண்டான வீழ்ச்சியைக் கண்டுபிடித்தேன், ஏனென்றால், “உங்களுடையக் கரங்களிலிருந்து எண்ணெய் வழிந்தோடுவதோ அல்லது உங்களுடைய முகத்திலிருந்து இரத்தம் வருவதோதான் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதற்கான ஒர் அடையாளம்” என்று கூறுகிறதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது வேதப்பிரகாரமானதல்ல, எனவே என்னால்—என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது தேவனுடைய வார்த்தையிலிருந்து வந்தாக வேண்டும். 58 இப்பொழுது, பவுல், அவன் வார்த்தையை அப்படியே நேசித்தான். ஆகையால் அவன் பெற்றிருந்த இந்த மகத்தான அனுபவத்தைக் குறித்து சாட்சி பகரும் முன்பு, அவன் எகிப்திற்கு சென்று மூன்று வருட காலம் தங்கியிருந்தான். அது மூன்று வருடங்கள், மூன்று வருடங்கள் எகிப்தில் இருந்தான் என்று நான் நினைக்கிறேன். அவன் என்ன செய்தான் என்று நான் நம்புகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவன் பழைய ஏற்பாட்டை எடுத்துக்கொண்டு, அது உண்மையாகவே முற்றிலும் மேசியாவாயிருந்தது என்பதைப் பழைய ஏற்பாட்டினூடாக ஆராய்ந்து கண்டறிந்தான். எனவே அவன் வேதாகமத்தின் மூலமாக தன்னுடைய அனுபவத்தை நிரூபிக்க வேண்டியதாயிருந்தது. ஆமென். ஓ, என்னே! 59 அவன் சிறைச் சாலையில் இருந்தபோது, அவனைக் கவனித்துப் பாருங்கள். நீங்கள் கவனித்துப் பாருங்கள். பவுல் நீண்ட காலமாக அங்கே சிறைச் சாலையில் இருந்தபோது, அவனுடைய ஜீவியத்தில் ஒரு நேரம் உண்டாயிருந்தது. எனவே அவன் எபேசியரின் புத்தகத்தை எழுதினான். அவன் எபிரேய நிருபத்தை எழுதினான். பார்த்தீர்களா? அவனுக்கு நேரம் இருந்தது. தேவன் அவனை அங்கே ஒரு சிறைச்சாலையில் தூரமாக வைத்திருந்தபடியால், அவன் அந்த நிரூபங்களை சபைகளுக்கு எழுதினான். எனவே அவனால் அவைகளை மாத்திரம் போதிக்க முடிந்தது…அவர்கள் சபைக்கு உள்ளே வந்த போது; ஒருவன் அந்நிய பாஷையை உடையவனாகவும், ஒருவன் ஒரு சங்கீதத்தை உடையவனாகவும், ஒருவன் ஒருவித உணர்ச்சிவசப்படுதலை உடையவனாகவும், ஒருவன் வேறுவிதமான ஒரு உணர்வினை உடையவனாகவும் இருந்தான். எனவே அவனால் பேச முடியாமற் போயிற்று, மேலும், “நித்தியப் பாதுகாப்பைக்” குறித்து அவர்களிடத்தில் பேசமுடியவில்லை. அவனால், “முன்குறித்தலைக்” குறித்து அவர்களிடத்தில் பேச முடியவில்லை. அவனால் அவர்களிடத்தில் பேச முடியவில்லை…அவர்கள் குழந்தைகளாயிருந்தனர். அவர்கள் எல்லோருமே ஏதோ ஒருவிதமான உணர்வினையும், அல்லது ஏதோ ஒன்றை பார்க்கிறவர்களாயும், அல்லது விநோதமான உணர்வுகளை பெற்றுக் கொண்டவர்களாயும், அவர்களைச் சுற்றிக் காணப்படுகின்ற ஏதோ ஒரு காரியத்தை உடையவர்களாயும், ஏதோ ஒரு சில அத்தாட்சிகளை உடையவர்களாகவும் இருந்து வந்தனர். 60 ஆனால் அவன் எபேசியர்களிடத்தில் பேசின போது, “உலகத் தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்மை இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக சுவிகாரப்புத்திரராகும்படிக்கு குமாரராகவும், குமாரத்திகளாகவும் முன்குறித்திருக்கிறார்” என்பதன் பேரில் அவனால் பேச முடிந்தது என்பதை நான் நம்புகிறேன். அதைப் பாருங்கள். என்னே! 61 மேலும் அவன் ரோமர் முதலியப் புத்தகத்தில் எழுதும் போது கவனித்துப் பாருங்கள். அவர்கள் ஆவிக்குரிய விதத்தில் வளர்ச்சியுற்றிருந்தனர். ஓ, அவர்கள் அந்நிய பாஷையில் பேசினர், நிச்சயமாகவே அவர்களுக்கு மத்தியிலே பரிசுத்த ஆவியின் மற்ற அடையாளங்களையும் அவர்கள் பெற்றிருந்தனர். ஆனால் அவர்கள் எந்த கோட்பாடுகளையும் உண்டுபண்ணிக் கொள்ளாமலும், உணர்ச்சிவசப்படுதல்களையும், சிறு நடுக்கங்களையும் மற்றும் விநோதமான உணர்வுகளையும் பெற்றுக் கொள்ளாமலுமிருந்தனர். 62 பவுல், “நீங்களோ—நீங்கள்—நீங்கள் அதனைக்கொண்டு மிகத் தீவிரமாக செல்லுகிறீர்கள். உங்களுக்கோ மறுபடியும் உபதேசிக்க வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் இன்னமும் குழந்தைகளாய், பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்” என்றான். 63 இப்பொழுது அந்தக் காரணத்தினால்தான் இந்தக் கூடாரமானது ஒரு கூட்ட குழந்தைகளாய் இருக்கக் கூடாது என்றே நான் எப்பொழுதும் போராட முயன்று வந்துள்ளேன். நாம் வளர்ந்தவர்களாயிருப்போமாக. பாதையில் நில்லுங்கள். ஓ என்னே! அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. 64 ஆகையால் பவுல் முதலில் தன்னுடைய அனுபவம் தேவனுடைய வேதத்தோடு பொருந்தியுள்ளதா என்று பார்க்கவே அங்கே செல்கிறான். 65 ஓ, இன்றைக்கு ஜனங்கள் மாத்திரம் அவ்வாறு மீண்டும் செய்திருப்பார்களாயின், நாம் நம்முடைய அனுபவத்தைத் தேவனுடைய வேதத்தோடு பொருந்திப் பார்த்திருப்போமேயானால், அது அற்புதமாயிருக்குமல்லவா? அது அவ்வாறு வேதத்தோடு பொருந்தாவிடில், அப்பொழுது நம்முடைய அனுபவமே தவறாயிருக்கிறது; அது ஊரீம் தும்மீமில் பிரகாசிக்காது. அது அதில் பிரகாசத்தை உண்டுபண்ணுமேயானால், ஆமென், நீங்கள் அதனோடு உங்கள் அனுபவத்தைப் பொருத்திவிட்டீர்கள் என்று அறிந்துகொள்ளலாம். ஆனால் அது பிரகாசிக்கவில்லையென்றால்…அது எவ்வளவு நல்லதாக தென்பட்டாலும் எனக்கு கவலையில்லை, அது சரியானது போன்று எவ்வளவு உண்மையாகக் காணப்பட்டாலும் எனக்கு கவலையில்லை. அந்த ஒளிகள் அந்த ஊரீம் தும்மீமிலிந்து பிரகாசிக்கவில்லையென்றால், அப்பொழுது அது தவறானதாகும். 66 நீங்கள் எவ்வளவு அனுபவத்தை உடையவராயிருந்தாலும், அது எவ்வளவு உண்மையானது போன்று தென்பட்டாலும், அது எவ்வளவுதான் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது எவ்வளவுதான் பயிற்சிமுறைக் கல்வி சார்ந்ததாயிருந்தாலும், என்னதான் ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதற்கான ஒரு பெரிய கருவியாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல; அது வார்த்தையின்படி பிரகாசிக்கவில்லையென்றால், அது தவறாகும், சரி. அது வார்த்தையோடு சரியாக இருக்க வேண்டும். 67 இப்பொழுது, பாதையின் மையம் ஒன்று உண்டு என்று நான் நம்புகிறேன். அந்தப் பாதை, இப்பொழுதோ, ஏராளமான சமயங்களில்,…நான் முன்பெல்லாம் ஒரு நசரேய சபைக்கு செல்வதுண்டு. கர்த்தர் அந்த அருமையான ஜனங்களை ஆசீர்வதிப்பாராக. பண்டைய நாகரீகங்கொண்ட, பரிசுத்தமாக்கப்பட்ட மெத்தோடிஸ்டுகளாய் அவர்கள் இருக்கிறார்கள். தேவனுடைய சபை, நசரேயர், யாத்திரீகப் பரிசுத்தர், மற்றும் அநேக அந்த நல்ல பண்டையப் பரிசுத்த சபைகள். அப்பொழுது அவர்கள் ஒரு பாடலை வழக்கமாகப் பாடுவதுண்டு: நான் பெரிய பண்டைய பெரும்பாதையில் நடந்துகொண்டிருக்கிறேன், நான் செல்கிற எங்கும் அதைக் கூறுகிறேன். நான் அறிந்துள்ள எந்தக் காரியத்தைக் காட்டிலும், கர்த்தாவே, நான் ஒரு பண்டைய கால கிறிஸ்தவனாயிருப்பதையே நான் விரும்புவேன். 68 நல்லது. அற்புதம். அப்பொழுது அவர்கள் பரிசுத்த பெரும்பாதையைக் குறித்து பேசுவதுண்டு. இப்பொழுது நீங்கள் அதை வாசித்துப் பார்ப்பீர்களேயானால், அவர்கள் அதை ஏசாயா 35-வது அதிகாரத்திலிருந்து எடுக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களேயானால், அவன், “அங்கே பெரும்பாதையான வழி இருக்கும்” என்றான். 69 இப்பொழுது அந்த வாக்கியத்தில் ஆங்கிலத்தில் ஒரு இணையிடைச் சொல் உள்ளது. புரிகிறதா? ஒரு பெரும்பாதை, அது ஒரு பரிசுத்த பெரும்பாதை என்றிருக்கவில்லை. “அது ஒரு பெரும்பாதையான வழி, அது ‘பரிசுத்த வழி’” என்றழைக்கப்படும். ஆனால் பரிசுத்த பெரும்பாதை என்றல்ல. “பரிசுத்த வழி”. பாதையின் வழியோ பாதையின் மையத்தில் உள்ளது. தண்ணீர் இருபக்கங்களிலும் குப்பையை கழுவி, பாதையை சுத்தமாக வைத்துக்கொள்ளவே அது இந்தவிதமாகக் கட்டப்பட்டுள்ளது. அது அந்தவிதமாகச் சரியாக கட்டப்பட வில்லையென்றால், நீங்கள் எல்லா நேரத்திலும் சகதியான குட்டையில் நின்றுக்கொண்டிருந்திருக்க வேண்டும். “வழியோ” பாதையின் மையத்தில் உள்ளது 70 இப்பொழுது, இந்தப் பக்கத்திலோ, ஜனங்கள் மனமாற்றமடையும்போது அவர்களுடைய சிந்தைகள் கிறிஸ்துவின் மேல் வைக்கப்படுகிறது. அவர்கள் சற்று கற்றறிந்த மேதைகளாய் இருந்தால், தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருப்பதில்லை. எனவே அவர்கள் உண்மையாகவே குளிர்ந்துபோய், விறைப்புத்தன்மைக்கொண்டு, வெற்றாச்சாரமுறையைக் கைக்கொண்டு, அலட்சியப் போக்குடையவர்களாகிவிடுகிறார்கள். அதன்பின்னர் அவர்கள் சற்று எளிதில் மனக்கிளர்சிசியடைகின்றவர்களாயிருந்தால், நீங்கள் அதை கவனிக்கவில்லையென்றால், அப்பொழுது அவர்கள் அந்தப் பக்கத்தில் கட்டுப்படுத்த முடியாத தீவிரப் பற்றுகொண்டு, உணர்ச்சி வசப்படுத்துதல்கள் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்திற்குள்ளாகவும் சென்றுவிடுகிறார்கள். பாருங்கள். 71 இப்பொழுது, ஆனால் உண்மையான சபையோ பாதையின் மையத்தில் உள்ள ஒரு உண்மையான நிதான புத்தியோடு கூடிய சுவிசேஷத்தை பெற்றுள்ளது. அது குளிர்ந்துபோய், வெற்றாச்சாரமுறை கொண்டதாயிராமலும், வெறித்தனமற்றதாயுமிருக்கிறது. அது உண்மையாகவே நல்ல, பண்டைய, அனல்கொண்ட சுவிசேஷத்தையும், தேவனுடைய அன்பை இருதயத்தில் உணர்ந்து, இருபக்கங்களிலுமிருக்கிறது. அது உண்மையே. இப்பொழுது அதனால் தான்…நீங்கள் எப்படி அந்தச் சபையை கணிக்கப் போகிறீர்கள்? சரியாக வார்த்தையைக் கொண்டே, ஊரீம் தும்மீம் மூலமாகவேயாகும். 72 இப்பொழுது பவுல் பாதையின் மத்தியில் இருக்கிற இந்தச் சபையைச் சென்றடைய விரும்பினான். எனவே அவன் தான் அறிந்திருந்த வேதவாக்கியங்களின் பேரில் அவன் அங்கு போய் மூன்று வருடங்கள் ஆய்ந்து படித்தான். ஆகையால்தான் பவுல் இந்த புதிய ஏற்பாட்டின் மிகப் பெரிய பகுதியை எழுதினான். தேவன் வரப்போவது ஒரு புறஜாதி காலமாயிருந்தபடியால் அவன் அதைச் செய்யும்படிக்குச் செய்தார். மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான், நான்கு சுவிசேஷங்கள், அவர்கள் யூதர்களாயிருந்தனர். ஆனால் பவுலோ பெரும்பாலான நிரூபங்களை எழுதினான். 73 இப்பொழுது கவனியுங்கள், இப்பொழுது, நாம் இந்தப் பின்னணியை கூறத் துவங்கப் போகிறோம். அவன் இதை சிறைச் சாலையிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறான். அவன் இந்த எல்லா அனுபவங்களையும் உடையவனாயிருந்தான். ஆனால் முதலில், இந்த அனுபவம் முதலில் நிருபிக்கப்பட்டது. இது அதற்கான அவனுடைய முக்கிய மூலாதாரமான நிருபமாயுள்ளது. இது அவனுடைய முக்கிய மூலாதார நிருபமாயுள்ளது. ரோமர்கள், எபேசியர்கள் போன்றவர்கள் தங்களுடைய ஸ்தானத்தில் இருந்தனர், ஆனால் இதுவோ மூல ஆதாரமான முக்கிய நிருபமாயுள்ளது. 74 இப்பொழுது, முதல் அதிகாரம் முழுவதுமே இயேசு கிறிஸ்துவை உயர்த்துகிறதாயும், ஒரு தீர்க்கதரிசி என்பதிலிருந்து அவரை வேறுபிரிப்பதாயுமுள்ளது. அதுவே முழு கருப்பொருளாகும். இப்பொழுது என்னால் முடிந்தளவு துரிதமாகக் கூறிட முயற்சிக்கவுள்ளேன். எனவே நாம் நீண்ட நேரம் தரித்திருக்கமாட்டோம். முழு ஆய்வுப் பொருளே வேறுபிரித்தல்…புதிய அதிகார…புதிய…இயேசுவை தீர்க்கதரிசி என்பதிலிருந்தும், நியாயப்பிரமாணத்திலிருந்தும் வேறுபிரித்து, இயேசு யாராயிருக்கிறார் என்பதைக் காட்டுவதே முதல் அதிகாரமாயுள்ளது. இப்பொழுது பாருங்கள், “தேவன்” முதல் வார்த்தையான, “தேவன்” என்பதிலிருந்து நாம் துவங்குவோம். பூர்வகாலங்களில்…தேவன்… பூர்வ என்பதன் பொருள், “முந்தின”, முந்தினகாலம். …பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், 75 இப்பொழுது, பாருங்கள், “தேவன் பூர்வகாலங்களில், முன்னர், அவர் பிதாக்களுக்கு தீர்க்கதரிசிகள் மூலமாய் திருவுளம் பற்றினார்.” அந்தவிதமாகத்தான் அவர் தம்முடைய செய்தியை அவருடைய தீர்க்கதரிசியினூடாகக் கொடுக்க வேண்டியதாயிருந்தது. 76 தேவன் தம்முடைய தீர்க்கதரிசியை எலியாவைப் போன்றும், எரேமியாவைப் போன்றும், ஏசாயாவைப் போன்றும் அனுப்புவார். நீங்கள் கவனிப்பீர்களேயானால், உலக சரித்திரம் முழுவதிலும் எப்போதுமே ஒரு சபையானது ஒரு தீர்க்கதரிசியை தோற்றுவித்ததேயில்லை. அதைப் பழைய ஏற்பாட்டிலோ, புதிய ஏற்பாட்டிலோ அல்லது இந்த நாளிலோ, பின்வரும் நாளிலோ ஆராய்ந்து பாருங்கள். எந்த தீர்க்கதரிசியாவது எப்போதாவது சபையிலிருந்து எழும்பியிருந்தார்களா என்பதை இந்த கடைசி நாளில் எனக்குக் காண்பியுங்கள். அவ்வாறு எப்போதாவது எழும்பின ஒருவரை எனக்குக் காண்பியுங்கள். ஒரு முறையாவது அந்த உலக திருச்சபை முறைமையைக் கடிந்து குற்றப்படுத்தாத ஒரு தீர்க்கதரிசியை, ஒரு உண்மையான தேவ ஊழியக்காரனை எனக்குக் காண்பியுங்கள். 77 அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். எரேமியா, ஏசாயா, மற்றும் பழைய ஏற்பாட்டினூடாக வந்த அவர்கள் எல்லோருமே அதைக் கடிந்து குற்றப்படுத்தினர். இயேசு, “நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளை சிங்காரித்து, அவைகளுக்கு வெள்ளையடிக்கிறீர்கள். நீங்கள் தான் அவர்களை அங்கே உள்ளே வைத்தீர்கள்” என்றார். அது உண்மை. 78 சபையானது அதைத் தொடர்ந்து செய்கிறது. பரிசுத்த பாட்ரிக் அவர்களை நோக்கிப் பாருங்கள். கத்தோலிக்க ஜனங்களாகிய நீங்கள் அவரை உங்களுக்கு சொந்தமானவராக உரிமை கோருகிறீர்கள். நான் எப்படி ஒரு கத்தோலிக்கன் அல்லவோ அதைப்போன்றே அவரும் ஒருபோதும் ஒரு கத்தோலிக்கரல்ல. அது உண்மை. ஆனால் நீங்கள் தான் அவரை அவ்வாறு உரிமை கோருகிறீர்கள். 79 பரிசுத்த பிரான்ஸிஸ் ஆஃப் அஸ்ஸிஸியை கவனித்துப் பாருங்கள். அவரையும் அவ்வாறு உரிமை கோருகிறீர்கள். அவரும் என்னைப் போன்ற ஒரு கத்தோலிக்கர் அல்ல. 80 ஜோன் ஆஃப் ஆர்க்கைக் கவனித்துப் பாருங்கள். நீங்கள் அவளை ஒரு சூனியக்காரியெனக் கருதி ஒரு கழு மரத்திலே அவளை கட்டி எரித்துவிட்டீர்கள், ஏனென்றால் அவள் தரிசனங்களை கண்டு, ஆவிக்குரியவளாக இருந்து வந்தாள். அவளையோ ஒரு கழு மரத்திலே வைத்து கட்டி எரித்துவிட்டீர்கள். அந்த ஸ்திரீயோ இரக்கத்திற்காக கதறி கூச்சலிட்டாள். அவர்கள் அவளை ஒரு கழுமரத்தில் கட்டி எரித்துவிட்டனர். ஏறக்குறைய நூறு ஆண்டுகள் கழித்து, அவள் ஒரு தீர்க்கதரிசினியாயிருந்தாள் என்று அவர்கள் கண்டறிந்தனர். அவள் ஒரு தேவனுடைய ஊழியக்காரியாக இருந்தாள். ஓ, உண்மையாகவே, நீங்கள் ஒரு பெரிய தண்டனையை அளித்துவிட்டீர்கள். நீங்கள் அவளை எரிக்க சம்மதித்த அந்த மதகுருமார்களின் சரீரங்களை தோண்டியெடுத்து அவைகளை ஆற்றில் வீசியெறிந்துவிட்டீர்கள். 81 “நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளை சிங்காரிக்கிறீர்கள். நீங்களே அவர்களை உள்ளே வைத்தீர்கள்.” உண்மை. ஸ்தாபன முறைமை எப்போதும் ஒரு தேவ மனிதனை தோற்றுவித்ததேயில்லை. ஒருபோதும் தோற்றவித்ததுமில்லை, இன்றைக்கும் தோற்றுவித்ததில்லை, இனிமேலும் ஒருபோதும் தோற்றுவிக்காது. ஸ்தாபிக்கப்பட்ட மார்க்கம் ஒருபோதும் தேவனுடைய கருப்பொருளாய் இருந்து வந்ததேயில்லை. 82 கத்தோலிக்க சபையே உலகில் ஸ்தாபிக்கப்பட்ட சபைகளிலேயே மிகப் பழமையானது. இரண்டாவது லூத்தர். அதன்பின்னர் ஸ்விங்கிலி வந்தார்; ஸ்விங்கிலிக்குப் பிறகு கால்வின் வந்தார்; கால்வினைத் தொடர்ந்து ஆங்கிலிக்கன், ஆங்கிலோ-சாக்ஸன்ஸ்களைத் தொடர்ந்து பின்னர் ஆங்கிலிக்கன் சபை; எட்டாம் ஹென்றி அரசன், அவன் எதிர்த்த போது, அதனைத் தொடர்ந்து வெஸ்லி மெத்தோடிஸ்டு, நசரேயன்கள், யாத்திரீகப் பரிசுத்தரைத் தொடர்ந்து கடைசியாக பெந்தேகோஸ்தே, ஆக எல்லாமே ஸ்தாபனமாக்கப்பட்டுவிட்டன. கத்தோலிக்க சபையானது துர்க்கீர்த்தி கொண்ட ஸ்திரீ என்றும், பிராட்டஸ்டென்டு சபைகளும், அவைகளுடைய ஸ்தாபன அமைப்புகளும் அவளுடைய குமாரத்திகள் என்றும் வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரம் கூறுகிறது என்பதை வேதம் தெளிவாகப் போதிக்கிறது. அது முற்றிலும் உண்மையே. ஆகையால் அவர்கள்… 83 இப்பொழுது ஜனங்கள் அல்ல. எல்லா சபைகளிலும், பரிசுத்தமாக்கப்பட்ட, இரட்சிக்கப்பட்ட ஜனங்கள் இருப்பது நல்லது தான். ஆனால் தேவன் ஸ்தாபனத்தின் மூலமாக தம்முடைய ஜனங்களை அழைக்கிறதில்லை. அவர் அவர்களைத் தனிப்பட்ட நபர்களாகவே அழைக்கிறார். தேவன் தனிப்பட்ட நபர்களோடு ஈடுபடுகிறார். நீங்கள் ஒரு மெத்தோடிஸ்டாய், பாப்டிஸ்டாய், பிராட்டஸ்டென்டாய், கத்தோலிக்கராய் அல்லது நீங்கள் யாராயிருந்தாலும் சரி. தேவன் உலகத் தோற்றத்திற்கு முன்பே உங்களை நித்திய ஜீவனுக்கென்று முன்குறித்து உங்களை அறிந்திருந்தார். இல்லையென்றால் நீங்கள் நித்திய இழப்பிற்கென்று முன்குறிக்கப்பட்டிருந்திருப்பீர்கள். இல்லை… 84 நீங்கள் கெட்டுப்போக வேண்டும், நீங்கள் அழிந்துபோக வேண்டும் என்று அவர் விருப்பங்கொண்டிருக்கவில்லை. ஆனால், அவர் முடிவற்றவராயிருக்கிறபடியால், அவர் துவக்கத்திலிருந்து முடிவு வரை அறிந்திருக்க வேண்டியதாயிருந்தது. இல்லையென்றால் அவர் தேவனாயிருக்க முடியாது. ஆகையால் இயேசு, “நல்லது, யாருக்காவது இரக்கம்…வேண்டுமா என்று நான் பார்ப்பேன்…நான் ஊழியம் செய்து ஒரு கடினமான வழியில் மரித்துப் போனால், அவர்கள் அநேகமாக இவ்வாறு நினைத்தால்…நல்லது, அப்பொழுது நான்…நான் அவர்களைச் சம்மதிக்கச் செய்வேன். அப்பொழுது அவர்கள்…” என்று கூறுவதற்காக ஒருபோதும் பூமிக்கு வரவில்லை. தேவன் தம்முடைய பணியினை அந்தவிதமாக செய்கிறதில்லை. 85 உலகத் தோற்றத்திற்கு முன்னே யார் இரட்சிக்கப்படுவார்கள் என்று தேவன் அறிந்திருந்தாரோ, அவர்களை இரட்சிக்கவேண்டும் என்ற ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே இயேசு வந்தார். அவர் அவ்வண்ணமாகக் கூறினார். அது உண்மை. ஆகையால் நீங்கள்… “ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.” பவுல் அதைக் கூறினான். அதே மனிதன் இங்கே கூறினான். 86 அவன், “அந்தக் காரணத்தினால்தான் ஏசாவும் யாக்கோபும் பிறப்பதற்கு முன்னமே தேவனால் இதைக் கூற முடிந்தது. அதாவது அவர், ‘நான் ஒருவனை சிநேகித்து, மற்றொருவனை வெறுத்தேன்’” என்று கூறினாரே என்றான். ஏசா பிறப்பதற்கு முன்பே, அவன் ஒரு வெட்க சுபாவங்கொண்ட ஒருவன் என்பதைத் தேவன் அறிந்திருந்தார். அவர் யாக்கோபையும் அறிந்திருந்தார்…அவன் தன்னுடைய சேஷ்டபுத்திரப்பாகத்தை நேசித்தான் என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆகையால் உலகம் உருவாகுவதற்கு முன்னமே அதைக் குறித்து அவர் அறிந்திருந்தார். இப்பொழுது அதை அறிந்திருந்தது யார் என்பதை இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் கண்டறியப் போகிறோம். இந்த அதிகாரம் அதைக் கொண்டுள்ளது. பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன். இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார். என்ன செய்துள்ளார்? “இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்.” 87 இப்பொழுது, ஒரு தீர்க்கதரிசி என்னவாயிருப்பார் என்பதைக் குறித்து நீங்கள் எப்படி எண்ணிக்கொள்வீர்கள்? அப்படியானால் நாம் இந்த நாளின் தீர்க்கதரிசியை உடையவர்களாயிருப்போமா? முற்றிலுமாக. அவர் அந்தத் தீர்க்கதரிசி மூலமாய் பேசுவாரா? நிச்சயமாக பேசுவார். ஆனால் அவர் அந்த…பண்டைய தீர்க்கதரிசிகள் இயேசு கிறிஸ்துவின் ஆவியை உடையவர்களாயிருந்தனர். 88 இப்பொழுது நாம் அதை சரியாகப் புரிந்துகொள்வோம், காரணம் இது சரியாக மனதில் பதிந்து கொண்டிருக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, இது ஞாயிறு வேதபாட பள்ளியைப் போன்று உள்ளது, எனவே நாம் இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். புரிகிறதா? 89 கவனியுங்கள். மோசேக்குள்ளிருந்த தேவனுடைய ஆவியை நாம் எடுத்துக்கொள்வோம். அது இயேசு கிறிஸ்துவுக்கு பரிபூரண…முன்னடையாள நிழலாயிருக்கிறது. பழைய ஏற்பாட்டு கதாப்பாத்திரங்கள் யாவுமே சிலுவைக்கு முன்னடையாள நிழலாயிருந்தன. மோசே ஒர் அழகுள்ளப் பிள்ளையாகப் பிறந்து, தன்னுடையப் பெற்றோர்களால் கொண்டு செல்லப்பட்டு, நாணற்பெட்டிக்குள் வைத்து நாணலுக்குள்ளே மறைத்து வைக்கப்பட்டான்…அவன் ஒரு இராஜாவாய், ஒரு—ஒரு தலைவனாய், நியாயப்பிரமாணிகனாய், பரிந்துபேசுபவனாய், ஆசாரியனாயிருந்தான். அவன் கொண்டிருந்த ஒவ்வொரு காரியமும் கிறிஸ்துவிற்கு முன்னடையாளமாக நிழலிடப்பட்டிருந்தது. 90 யோசேப்பை கவனித்துப் பாருங்கள், அவன் தன்னுடையத் தகப்பனால் நேசிக்கப்பட்டு, தன்னுடைய சகோதரர்களால் வெறுக்கப்பட்டு, ஏறக்குறைய முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விற்கப்பட்டான். பின்னர் ஒரு குழிக்குள்ளாக மரித்தவன் போன்று வீசியெறியப்பட்டு, பின்னர் தூக்கியெடுக்கப்பட்டான். அவனுடைய சிறைச் சாலை துன்பத்தில் பானபாத்திரக்காரன் இரட்சிக்கப்பட்டான், சுயம்பாகி இழக்கப்பட்டான். அதாவது சிலுவையில் தொங்கிய இரண்டு கள்ளர்களைப் போலவே. அதன்பின்னர் யோசேப்பு வெளியே வந்தான். அவன் அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுக்கப்பட்டு, பார்வோனுடைய வலது பாரிசத்தில் உட்காரவைக்கப்பட்டான், உலகத்தின் ஏனையப் பகுதிகளையெல்லாம் அடக்கி வைத்திருந்த மிகப்பெரிய வணிக தேசத்தில்…இருந்தான். யோசேப்பினூடாக அவர்கள் வந்தாலன்றி, எந்த மனிதனும் பார்வோனண்டை வர முடியாது. இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறபடியால், கிறிஸ்துவின் மூலமே வந்தாலன்றி வேறெந்த மனிதனும் தேவனண்டை வரமுடியாது. யோசேப்பு சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டு வெளியே செல்லும்போது, அவனுக்கு முன்பாக மனுஷர் சென்று ஆர்ப்பரித்து, எக்காளங்களை ஊதி, “தெண்டனிட்டுப் பணியுங்கள், யோசேப்பு வருகிறார்” என்று முழக்கமிட்டுக் கூறினர். 91 இயேசு வருகிறபோது, ஒரு எக்காளம் தொனிக்கும், அப்பொழுது முழங்கால் யாவும் முடங்கும், நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும். ஆம் ஐயா. அந்தவிதமாகத்தான் யோசேப்பு இருந்தான். 92 யோசேப்பு மரித்தபோது, அவன் தன்னுடைய எலும்புகளை ஒரு ஞாபகர்த்தமாக விடுதலைக்காகக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு விட்டுச் சென்றான். 93 நான் அண்மையில் அவனுடைய சரீரத்தின் எலும்புகள் வைக்கப்பட்டிருந்த அந்தப் பெட்டியின் மீது என்னுடைய கரத்தை வைத்தேன். அது ஈயத்தினால் செய்யப்பட்டிருந்தது. எனவே யோசேப்பு, “என்னை இங்கு நீங்கள் அடக்கம்பண்ணாதீர்கள். ஏனென்றால் என்றோ ஒரு நாளில், தேவன் உங்களைச் சந்திக்கப் போகிறார்.” என்று கூறினான். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். “தேவன் உங்களைச் சந்திக்கப் போகிறார். எனவே நீங்கள வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்லும்போது, என்னுடைய எலும்புகளைக் கொண்டு செல்லுங்கள்” என்றான். 94 ஒரு பண்டைய எபிரேயனால் முதுகிலே கசையடியும், இரத்தமும் கொண்டவனாய் நின்று அந்தப் பெட்டியை நோக்கிப் பார்த்து, “என்றோ ஒரு நாள், நாம் இங்கிருந்து போகப்போகிறோம்” என்று கூற முடிந்தது. 95 இயேசுவானவரோ காலியான கல்லறையையே ஒரு நினைவுச் சின்னமாக விட்டுச் சென்றார். என்றோ ஒரு நாள் நாம் கல்லறைக்குச் செல்லும்போது, நம்முடைய அன்பார்ந்தவர்கள் அடக்கம்பண்ணப்படும்போது, மற்றவர்களோ சிறு மண்கட்டிகளைத் தூவி, “சாம்பலுக்கு சாம்பலும், தூசிக்கு தூசியும், மண்ணுக்கு மண்ணுமாயிருக்கிறாய்” என்று கூறக் கேட்கிறோம். ஆனால் சகோதரனே, நம்மால் சமுத்திரத்திற்கு அப்பால் ஒரு காலியான கல்லறையை நோக்கிப் பார்க்க முடிகிறது. என்றோ ஒரு நாளில் நாம் இங்கிருந்து போகப் போகிறோம். நாம் பரலோக வீட்டிற்குச் செல்லப் போகிறோம். அவர் வருகிறார். ஒவ்வொரு காரியமும் மாதிரியாக்கப்பட்டிருந்தது. 96 தாவீதை நோக்கிப் பாருங்கள், அவன் தன்னுடைய சொந்த ஜனங்களால் புறக்கணிக்கப்பட்டு, தன்னுடைய சொந்த ஜனங்களால் சிங்காசனத்திலிருந்து இறக்கிவிடப்பட்டான். எருசலேமில் ஒரு இராஜாவாக இருந்து, தன்னுடைய சொந்த ஜனங்களால் எருசலேமிலிருந்து துரத்திவிடப்பட்டான். அவன் ஒலிவ மலையின்மீது ஏறும்போது, அவன் பின்னோக்கிப் பார்த்து அழுதான். அவன் புறக்கணிக்கப்பட்டான். 97 அதன்பின்னர் எண்ணூறு ஆண்டுகள் கழித்து, தாவீதின் குமாரன், எருசலேமின் இராஜா அதே விதமாக ஒரு மலையில் நின்று அழுதார், ஏனென்றால் அவர் புறக்கணிக்கப்பட்டிருந்தார். 98 அது தாவீதுக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவியாய் இருந்தது. எல்லாமே சிலுவைக்கு முன்னடையாளமாக நிழலிடப்பட்டிருந்தன. அங்கே முன்னர் அந்தத் தீர்க்கதரிசிகளோ அவருடைய நாமத்தில் பேசினர். அவர்கள் அவருடைய நாமத்தில் ஜீவித்தனர். அவர்கள் அவருடைய நாமத்தில் செயல்பட்டனர். நிச்சயமாகவே, “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்.” 99 ஆகையால் தீர்க்கதரிசிகள், ஆவிக்குரிய மனிதர்கள், இந்த நாளின் கிறிஸ்துவின் பிரதிபலிப்பாய் மாத்திரமே உள்ளனர். அவர்கள் நியாயப்பிரமாணத்தைக் கொண்டு நின்று நோக்கிப் பார்த்தனர். இங்கே அவர்கள் வேறுவிதமாக நின்று கிருபையினூடாகப் பின்னோக்கிப் பார்க்கின்றனர். 100 அது எபிரேயர் 11-ல் உள்ளது, கடைசி அதிகாரம், நான் அதைக் குறித்து அவ்வப்போது வியந்துள்ளேன். அந்தக் கடைசி அதிகாரத்தில், அவன் ஆபிரகாமைக் குறித்துப் பேசும்போது, எபிரேயர் 11-ம் அதிகாரத்தின் கடைசி பாகத்தில் பேசுகிறான். அது மகத்தான விசுவாசத்தைக் குறித்த அதிகாரம், அந்த அதிகாரத்தின் முடிவிலே அவன், “அவர்கள் செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு, திரிந்து, குறைவை அனுபவித்து, வாளால் அறுப்புண்டார்கள். அவர்கள் செல்ல இடமில்லாமல் அலைந்து திரிந்து, வெறுக்கப்பட்டு, நிந்திக்கப்பட்டு, துன்பப்படுத்தப்பட்டனர். உலகம் அப்படிப்பட்ட ஜனங்களுக்கு பாத்திரமாயிருக்கவில்லை” என்று கூறினான். 101 அதன்பின்னர் பவுல் நின்று, “அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகவில்லை” என்று கூறினான். ஏனென்றால் அவர்கள் சிலுவையண்டை மாத்திரமே நோக்கிப் பார்த்தனர். நாமோ சிலுவையினூடாக நோக்கிப் பார்க்கிறோம். அவர் மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணின பிறகே நாம் கிறிஸ்துவின் ஆவியை உடையவர்களாயிருக்கிறோம். நாம் பரிசுத்த ஆவியினால் இங்கே வந்துள்ளோம், அது இதுவரையிருந்ததிலேயே மேலான ஒரு திட்டமாய் உள்ளது. 102 சில சமயங்களில் கிறிஸ்தவமார்க்கம் இன்றைக்கு எதை எதிர்பார்க்கிறது என்று எண்ணி வியப்புறுகிறேன். ஒரு பிரசங்கியார் ஒரு கூடாரத்திற்கு…அல்லது ஒரு புதிய சபைக்கு சென்று அல்லது புதிய பதவியோடு, தன்னையே ஒரு தீர்க்கதரிசி என்று அழைத்துகொண்டு, அங்கே நடந்து சென்று, “நல்லது அவர்கள் எனக்கு மிக அதிகமான பணம் கொடுத்தால் நலமாயிருக்கும், என்னால் ஒரு மிகச் சிறந்த காரை வைத்திருக்க முடிந்தால் நலமாயிருக்கும். அவர்கள் அவ்வாறு அளித்தால்…என்னுடைய சம்பளம் ஆறுமாதத்திற்கு ஒரு முறை உயர்த்தப்படுமானால் நலமாயிருக்கும்” என்று கூறுவதாகத்தான் உள்ளது. 103 நாம் மிகச் சிறப்பானதைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். நாம் மிகச் சிறந்த வீடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். நாம் மிகச் சிறந்த ஆடைகளை அணிந்துகொள்ளவேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால் செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்திக்கொண்டு தங்களுடையத் தலையை சாய்க்க இடமில்லாமல் வனாந்திரங்களில் அலைந்து திரிந்தவர்களுக்கு முன்பாக நாம் நிற்கும் போது, நாம் என்ன செய்வோம்? சிலர் நம்மைக் குறித்து பரியாசம் செய்யலாம், உடனே நாம் சபைக்குச் செல்வதை விட்டுவிட ஆயத்தமாகி, திரும்பச் செல்லவேக் கூடாது என்ற நிலைக்கு வந்துவிடுகிறோம். இன்றைக்கு கிறிஸ்தவமார்க்கத்திற்கு எது தேவைப்படுகிறது? நாம் நம்மைக் குறித்து வெட்கப்பட வேண்டியவர்களாயிருக்கிறோம். ஓ தேவனே, எங்களிடத்தில் இரக்கமுள்ளவராயிரும். 104 அந்த நாளிலே அவர் தீர்க்கதரிசிகள் மூலமாய்த் திருவுளம்பற்றினார். ஆனால் இந்த நாளிலோ தம்முடைய குமாரன் மூலமாய்த் திருவுளம்பற்றினார். அங்கே அது ஒரு தீர்க்கதரிசியின் வார்த்தையாய் இருந்தது. இன்றைக்கோ இது குமாரனின் வார்த்தையாயுள்ளது. ஓ, கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! 105 வேறு வார்த்தைகளில் கூறினால், நீங்கள் நிழலை நோக்கிப் பார்த்துக்கொண்டிருப்பீர்களேயானால், நிழற்படத்தை நோக்கிக் கொண்டிருந்தால், நீங்கள் ஒரு தவறு செய்ய நேரிடலாம். ஆனால் இதுவோ நிழற்படத்திலிருந்து தெளிவாகப் புகைப்படமாக்கப்பட்டுள்ளது. அது தீர்க்கதரிசி மூலமாய் உண்டானது; இதுவோ குமாரன் மூலமாய் உண்டானது. அது ஒரு நிழற்படமாயிருந்தது; இதுவோ ஒரு புகைப்படமாயுள்ளது. ஆமென். உங்களுக்கு இது புரிகிறதா? இதைப் புரிந்துகொள்ளாமலிருக்க வாய்ப்பேயில்லை. இது ஒரு நிஜமான காரியமாயுள்ளது, இந்த நாளில் தம்முடைய குமாரன் மூலம் உண்டாகியுள்ளது. ஓ, எவ்வளவு அற்புதமாயுள்ளது! இவரைச் சர்வத்துக்கும் சுதந்திரவாளியாக…(ஓ, என்னே)…நியமித்தார். 106 அது என்னவாயிருந்தது? அது நியமனமாயிருந்தது. ஓ, கவனியுங்கள். அவர், கிறிஸ்து சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமிக்கப்பட்டார். ஓ, நீங்கள் பாருங்கள், பிசாசு ஏதேன் தோட்டம் முதற்கொண்டே அதை அறிந்திருந்தான். பிசாசு அந்த நாளிலே அந்த ஜனங்களின் நியாயத்தீர்ப்பில் கூறப்பட்ட வார்த்தையைக் கேட்டான். அப்பொழுது அவர், “நீ பூமியின் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ மண்ணுக்குத் திரும்புவாய்; ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தினுடைய தலையை நசுக்கும்” என்றார். ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்து. 107 சாத்தான் அந்த வித்தை தொடர்ந்து கவனித்து வந்தான். எனவே ஆபேல் பிறந்துபோது, அவன், “நீ தான் அந்த வித்து” என்றான். ஆகையால் அவன் ஆபேலைக் கொன்றான். சாத்தானுடைய குமாரன் காயீன் ஆபேலைக் கொன்றான். ஆபேல் மரித்துப்போனவுடன், அவன், “நான் அந்த வித்தைப் பிடித்துவிட்டேன்” என்றான். அவன் அதைக் கொன்றுபோட்டான். எனவே அவன், “நான் அதைப் பிடித்துவிட்டேன்” என்றான். ஆனால் ஆபேலினுடைய மரணத்திற்கு பிறகு உண்டான சேத்தினுடைய பிறப்பு மீண்டும் உயிர்த்தெழுதலாயிருந்தது. அவர்கள் எப்படித் தோன்றினர் என்பதைக் கவனியுங்கள். 108 அந்த சேத்தின் வம்ச வரிசையில் ஒரு தாழ்மையான, நீதியுள்ள மனிதர் தோன்றி, அதனூடாகவே ஏனோக்கு தோன்றினார்; பின்னர் நோவா வரைக்கும் வந்து முடிவிலே ஜலப்பிரளய அழிவு உண்டானது. 109 காயீனுடைய வம்ச வரிசையைப் பாருங்கள், அதில் சாமர்த்தியமான, கல்விகற்ற, விஞ்ஞானிகளான மனிதர் தோன்றினர். வேதம்…அவ்வாறு கூறவில்லையா…இயேசு, “இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப்பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்” என்று கூறவில்லையா? இன்றைக்கும் காயீனுடைய வம்ச வரிசையினூடாகப் பார்ப்பீர்களேயானால், புத்திசாதுர்யமான, கல்விபயின்ற, சந்தேகிக்கின்ற, மிகவும் பக்தியான, பாருங்கள், மிகவும் பக்தியானவர்கள் தோன்றி, அவர்கள் விஞ்ஞானிகளாய், கட்டிட அமைப்பாளர்களாய், மகத்தான மனிதர்களாய் இருக்கின்றனர். 110 மகத்தான மனிதர்களை எடுத்துக்கொள்ளுங்கள். தாமஸ் எடிசன் மற்றும் இன்னும் மகத்தான மனிதரைப் பாருங்கள். ஜன்ஸ்டீனைப் பாருங்கள், இன்றைக்கும் உலகத்தின் மூளை, உலகத்தின் மூளை என்றழைக்கப்படுகின்றனர். ஆனால் நாம் மூளைகளை உபயோகிக்க முயற்ச்சிப்பதில்லை. நாம் கிறிஸ்துவுக்குள்ளிருந்த சிந்தை நமக்குள்ளாக இருக்க அனுமதித்து, இந்த வார்த்தையை நோக்கிப் பார்த்து, அது இருக்கிறவண்ணமாகவே அதைக் கூறுவோம். 111 நாம் மருத்துவ வைத்தியர்களை, நாம் என்னவெல்லாம் பெற்றுள்ளமோ, அதனைக்கொண்டு மரியாதை செலுத்தினாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் சந்தேகக்காரர்களாய், கடவுளைப் பற்றிய கொள்கைகளில் சந்தேகமுள்ளவர்களாய் இருக்கின்றனர். இன்றைக்கும் புத்திசாதுர்யமான, அறிவாற்றலுள்ள ஜனங்களை நோக்கிப் பாருங்கள். அவர்கள் காயீனின் வம்ச வரிசையில், அந்தப் பக்கத்தான் இருக்கின்றனர். 112 ஆனால் தாழ்மையும், சாந்தமானவர்களை நோக்கிப் பாருங்கள். அங்குத்தான் மீண்டும் உங்களுடைய உயிர்த்தெழுதல் உள்ளது. ஓ, கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. அங்குதான் உங்கள் காரியம் உள்ளது. கவனியுங்கள். …இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார். இவரைக் கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். யார் உலகங்களை உண்டாக்கினது? கிறிஸ்து. “கிறிஸ்து உலகங்களை உண்டாக்கினாரா?” ஆம் ஐயா. நாம் இன்னும் சற்று மேற்கொண்டு பார்ப்போம். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து… யாருடைய மகிமையின் பிரகாசம்? தேவனுடைய மகிமை. யாருடைய தன்மையின சொரூபம்? தேவனுடைய. ஓ, நான் இதை விரும்புகிறேன். …அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய்… அங்குதான் காரியம். வார்த்தையே சர்வத்தையும் தாங்குகிறது. இயேசு மத்தேயு 24-ம் அதிகாரத்தில், “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” என்றார். அவர் சர்வத்தையும் தாங்குகிறார். 113 விஞ்ஞானமோ அதை மேற்கொள்ள முயற்சித்து, “அது ஒரு பண்டைய புத்தகம். அது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது” என்று கூறுகிறது. 114 ரோமன் கத்தோலிக்க சபை, பேராயர் ஷீன் அவர்களும் கூட “அது நான்கு அல்லது ஐந்து பல்வேறுபட்ட சமயங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, எனவே அது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. நீங்கள் அதை வைத்திருந்தாலும், அதனைக் கொண்டு நீங்கள் ஜீவிக்க முடியாது” என்று கூறிவிட்டார். ஆனால் அவர் சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறார். ஆமென். அதைக் குறித்துதான் நான் சிந்தித்துப் பார்க்கிறேன். நான் வேதாகமத்தை விசுவாசிக்கிறேன். …தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், (வார்த்தையில்தான் வல்லமை உண்டு), தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி,…(இஙகே பாருங்கள்) உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார். 115 பவுல் என்ன செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கிறார்? தேவன் எல்லாக் காரியங்களையும் கிறிஸ்துவுக்குள்ளாக தீர்மானித்திருந்தார், கிறிஸ்து தேவனுடைய சொரூபத்தின் தன்மையாயிருந்தார். இந்த அதிகாரத்தில் மீதமுள்ள யாவுமே எப்படி அவர் தேவ தூதர்களைக் காட்டிலும் மேன்மையுள்ளவராயிருந்தார் என்றும், எல்லா வல்லமைகளுக்கும் மேம்பட்டவராயிருந்தார் என்பதையுமே எடுத்துக் கூறுகிறது. தேவதூதர்கள் அவரை தொழுதுகொண்டனர். பவுல் அவரை பெரிய அளவில் மேன்மைபடுத்திக் காட்ட முயற்சித்துக்கொண்டிருந்தார். 116 இப்பொழுது, நான் கூற வேண்டும் என்று முயற்சிப்பதோ…நான் இதற்கு மேல் விளக்கிக் கூறவில்லையென்றாலும், இந்த அதிகாரத்தினுடைய மற்றக் காரியங்களும் கிறிஸ்துவையே மிகப்பெரிய அளவில் மேன்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. பவுல் இங்கே என்ன கூறுகிறாரென்றால், 11-ம் அதிகாரத்தில் உள்ளது போன்று, உலகத்தைக் குறித்துப் பேசுகிற எல்லாவற்றைக் குறித்தும் பேசுகிறார். அவர், ‘“நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன்’ என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?” என்றார். புரிகிறதா? 117 “உலகத்தின் முடிவில் வானங்கள் அழிந்துபோம். உலகம் அழிந்துபோம். ஆனால்…உலகத்தின் எல்லாக் காரியங்களும் அழிந்துபோம். அவர் அவைகளை ஒரு சால்வையைப் போல சுருட்டுவார். அவைகள் பழமையாய் போய் மாறிப்போகும், ‘ஆனால் நீரோ மாறாதவராயிருக்கிறீர். நீரோ என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறீர். நீர் என்னுடைய குமாரன். இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன். நீரோ ஒருபோதும் ஒழிந்துபோகாமல், உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்தில் உட்காருவீர்.’” வலதுகரம் என்பதன் பொருள் என்ன? தேவனுக்கு ஒரு வலக்கரமாயிருக்கிற யாரோ ஒருவர் அங்கே அமர்ந்துகொண்டிருக்கிறார் என்பதல்ல. வலக்கரம் என்பது “வல்லமையையும், அதிகாரத்தையுமே” பொருட்படுத்துகிறது. வானத்திலும், பூமியிலுமுள்ள ஒவ்வொருகாரியத்தின் மேலும் பெற்றுள்ள அதிகாரமாகும். வானங்களும், பூமியும் யாவும் அவர் மூலமாகவே உண்டாக்கப்பட்டிருக்கின்றன. 118 இப்பொழுது, யார் இந்த மகத்தான நபர், இந்த மகத்தான நபர் யார்? கிறிஸ்து. இங்கே பிதா, குமாரன் பரிசுத்த ஆவியில் தேவன், அது…இல்லை…அது ஒரு திரித்துவம். ஆனால் அது திரித்துவ ஜனங்களல்ல. அது ஒரே தேவனின் திரித்துவ உத்தியோகமாகும். 119 அவர் இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்தினபோது பிதாவாக இருந்தார். அது அவருடைய உத்தியோகமாயிருந்தது, அது மகத்தான யேகோவா பிதா. அவர் பூமியில் வாசம்செய்தபோது, குமாரன் என்று அழைக்கப்பட்டார். இப்பொழுதோ அவர் தம்முடைய சபையில் வாசம் செய்துகொண்டு, பரிசுத்த ஆவி என்று அழைக்கப்படுகிறார். மூன்று தேவர்கள் அல்ல; ஒரே தேவன் மூன்று உத்தியோகங்களில் இருத்தல்; பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. ஜனங்களோ அவரை மூன்று வித்தியாசமான தேவர்களாக்க முயற்சிக்கிறார்கள், பிதாவாகிய தேவன். அந்தக் காரணத்தினால்தான் யூதர்கள்…நீங்கள் இதை ஒரு யூதனிடம் ஒருபோதும் கொண்டு செல்ல முடியாது. அங்கே அவர்களிடம் அதைக் கொண்டு செல்ல முடியாது. ஒரு யூதனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால், “நான் ஒருவரே தேவன்” என்ற ஒரு கட்டளையை அவன் பெற்றுள்ளான். ஒரே தேவன் மாத்திரமே உண்டு. 120 ஆப்பிரிக்காவில் அவர்கள் மூன்று வித்தியாசமான வழிகளில் ஞானஸ்நானங்கொடுக்கிறார்கள்; அவர்கள் பிதாவிற்காக ஒருமுறையும், குமாரனுக்காக ஒருமுறையும், பரிசுத்த ஆவிக்காக ஒருமுறையும் ஞானஸ்நானங்கொடுக்கிறார்கள். அப்போஸ்தல விசுவாச ஊழியம் என்ற ஸ்தாபனத்தில் அவர்கள் அவருடைய மரணத்திற்காக முகத்தை முன்னோக்கியவாறு மூன்று முறை முழுக்கி ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். அவர்கள் அதை மேற்கு கடற்கரையின் பேரிலான முழு சுவிசேஷம் என்று அழைக்கிறார்கள் இல்லை கிழக்கு கடற்கரை, பின்னர் மூன்றுமுறை பின்பக்கமாக முழுக்கி ஞானஸ்நானம் கொடுத்து, அது…அவருடைய அடக்கம் என்கிறார்கள். மேலும், “அவர் மரித்தபோது, அவர் முகங்குப்புற விழுந்தார்” என்று அந்த நபர் கூறினார். 121 மற்றொருவர், “பொறுங்கள், நீங்கள் ஒரு மனிதனை முதுகுப்பக்கமாக அடக்கம்பண்ணுகிறீர்கள்” என்றார். அவை வெறுமென பழைய உத்தியான காரியங்கள், அவர்கள் இருவருமே தவறாயிருக்கிறார்கள், வேதவாக்கியத்தின்படி இரண்டுமே தவறாயுள்ளது. இதுதான் ஊரீம் தும்மீமாயுள்ளது. அதுவே இதனைத் தீர்த்து வைக்கிறது. 122 இப்பொழுது, இங்கே, நாம் அதை சித்தரித்துப் பார்ப்போமாக, இன்றிரவு அது என்னவாய்க் காணப்படுகிறது என்பதைப் பார்ப்போமாக. நீங்கள் அதைக் காண விரும்பினால், இதோ அது உள்ளது. ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்களாக ஒரு ஊழியனாக இருந்து வருகின்றபடியால், நான் அதை ஆய்ந்து படித்துள்ளேன். சபையில் உள்ள வரங்களைக் குறித்து நான் அவ்வப்போது வியப்படைந்துள்ளேன். அந்த வரங்கள் என்ன? தீர்க்கதரிசனம், அந்நிய பாஷைகளில் பேசுதல், அந்நிய பாஷைகளுக்குரிய வியாக்கியானம், தெய்வீக வெளிப்பாடு போன்ற இவையாவும் கிற்ஸ்துவினூடாகவே வருகின்றன. 123 இப்பொழுது பாருங்கள். கிறிஸ்துவே எல்லாக் காரியங்களுக்கும் தலையாயிருக்கிறார். அவர் சபைக்கு தலையாயிருக்கிறார். நீங்கள் எப்போதாவது ஒரு பெரிய வைரத்தைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு மகத்தான பெரிய வைரம் சரியாக செதுக்கப்படுகின்றபோது, அதிலிருந்து சிறு வைரத் துணுக்குகள் செதுக்கப்பட்டு வெளியே வருகின்றன. அதிலிருந்து செதுக்கியெடுக்கப்படுகின்றன. அதுவே ஒரு சரியான வைரத்தை உண்டாக்குகிறது. அந்தத் துணுக்குகள் என்னத்திற்காக? உண்மையான வைரம் அந்த வழியில் தான் உண்டாகிறது, அது நொறுக்கப்படுகிறது; அப்பொழுது அந்த உண்மையான வைரம் கண்டறியப்படுகிறது. நான் கிம்பர்லியில் இருந்தேன். உங்களிலி அநேகர், அங்கே வீதியில் வைரங்களை பொறுக்கியெடுக்க முடியும் என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள், அது சரியே. பில்லியும், நானும், திரு.பாஸ்வர்த் அவர்களும் அங்கிருந்தோம். கிம்பர்லி வைர சுரங்கத்தின் தலைவர்…எங்களை அழைத்துச் சென்றார். அவர் அங்கே என்னுடைய கூட்டத்தில் வரிசைகளை ஒழுங்குபடுத்துபவராயிருந்தார். அவர்கள் அங்கே எங்களை அழைத்துச் சென்றனர்…அவர்கள் அந்தச் சுரங்கத்தை ஏறக்குறைய, ஓ, பூமிக்கு கீழாக ஆயிரத்து எழுநூறு அடி ஆழம் தோண்டியிருந்தனர். அவர்கள் அங்கிருந்து ஒரு நீலக் கல்லை, பெரிய நீலக்கல்லை அங்கிருந்து எடுக்கிறார்கள், நீங்கள் இந்த விதமான நீலக்கல்லை இங்கே பெறலாம். அந்த சுதேசிகளை, அவர்கள் அங்கு அமர்த்தி விலைமதிப்பை உயர்த்துவதற்காகவே அந்த ஆயிரத்து எழுநூறு அடி ஆழத்தில் பணிபுரியச் செய்கின்றனர். நீங்கள் அந்த ஆற்றண்டை செல்வீர்களேயானால், அவர்கள் அதற்கு ஆயிரம் மைல்கள் அளவிற்கு பாதுகாப்பிட்டிருப்பதைக் காணலாம். அவர் அங்கிருந்து இரண்டு பத்து காலன் வாளிகள் நிறை மணல் எடுப்பதாகக் கூறினார். நீங்கள் அதை உங்களுடைய வீட்டிற்கு கொண்டுசெல்லக் கூடுமானால், நீங்கள் ஒரு கோடீஸ்வரராகிவிடுவீர்கள், ஏனென்றால் அதில் அநேக வைரங்கள் இருக்கும். ஆனால் அவர்கள் அங்கு விலைமதிப்பை உயர்த்தவே அந்த சுரங்கத்தில் அவர்களை வேலை செய்ய வைக்கிறார்கள். 124 இப்பொழுது அந்த வைரம், அது வெளிப்படும்போது, அது ஒரு பெரிய, மிருதுவான, வட்டமான கண்ணாடித் துண்டு போன்று காணப்படும். ஒரு நீல வைரம், கறுப்பு வைரம், மரகதம், ஒரு தெளிவான வைரம், வெள்ளை வைரம் என்பதும் உண்டு. ஆனால் அது வெளிப்படும்போதோ…அதன்பின்னர் அது முறையாக தயாரிக்கப்பட்டு, அது உபயோகத்திற்கு வைக்கப்படுகிறது. அப்பொழுது அந்த வைரத்தின் ஒரு பாகத்தை அது இழக்கவேண்டியதாயுள்ளது. அதிலிருந்து செதுக்கப்படுகின்ற துணுக்குகளை அது இழக்க வேண்டியதாயுள்ளது. செதுக்கப்படுகிற அந்தச் சிறு துணுக்குகள், அவைகளில் நேரடியாக ஒளிப்படும்போது, அவைகள் இந்தவிதமான ஒரு பிரகாசத்தை உண்டுபண்ணுகின்றன. அந்தத் துணுக்கு, அந்த வைரம் அந்தவிதமாக வெட்டப்படும்போது, அது மினுக்கான பிரகாசத்தை உண்டு பண்ணுகிறது. அது வெட்டியெடுக்கப்பட்டு, செதுக்கப்பட்ட பிறகே அது பிரகாசமாய் மின்னுகிறது. ஒன்று ஒரு பச்சைநிற ஒளியையும், மற்றொன்று ஒரு நீல நிற ஒளியையும், ஒருகால் மற்றொன்று வேறொரு நிறத்தையும், மற்றொன்று மரகத நிற ஒளியையும், மற்றும் சிவப்பு நிற ஒளியையும் பிரகாசிக்கும். ஒரு வானவில் நிறத்தைப்போல, அதிலிருந்து வித்தியாசமான ஒளிகள் புறப்பட்டு செல்லுகின்றன. அவர்களோ அதை, “வைரத்தில் உள்ள நெருப்பு” என்று அழைக்கிறார்கள். 125 இப்பொழுது, அந்த ஒவ்வொரு ஒளிகளும் வரங்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஆனால் கிறிஸ்து மாத்திரமே வைரமாயிருக்கிறார். அவர் உலகத்திற்கு ஒரு ஒளியாக தம்மையே திரும்பவும் பிரதிபலிக்கும்படி இறங்கி வந்து, நொறுக்கப்பட்டு, காயப்பட்டு, அடிக்கப்பட்டவராயிருந்தார். அவரே அந்த சிறந்த வைரமாயிருந்தார். 126 பூமி உண்டாயிருந்ததற்கு முன்னே, ஒரு வெளிச்சம் உண்டாயிருந்ததற்கு முன்பே, ஒரு நட்சத்திரம் உண்டாயிருந்ததற்கு முன்பே, எந்த ஒரு காரியமு உண்டாயிருந்ததற்கு முன்பே எவ்வாறு இருந்திருந்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஒரு மகத்தான ஊற்று, ஆவிக்குரிய ஊற்று ஓடிகொண்டிருக்க, இந்த ஊற்றிலிருந்து களங்கமில்லா மிகத் தூய அன்பு தோன்றினது, ஏனென்றால் அன்பைத் தவிர அதிலிருந்து வெளிவர வேறொன்றுமே இல்லாதிருந்தது. இப்பொழுது, நாம், இன்றைக்கு நாம் அன்பு என்று அழைப்பதோ ஒரு தாறுமாறாக்கப்பட்ட அன்பாய் இருக்கிறது. ஆனால் நாம் அந்த அன்பின் சாரம்சத்தை, இல்லை அந்த அன்பின் ஒரு துளியை நமக்குள்ளாகப் பெற்றுக்கொள்ளும்போது, அது நம்முடைய முழு கருத்தையுமே மாற்றிவிடுகிறது. 127 அதன்பின்னர் அங்கிருந்து, இந்த முக்கிய ஊற்றிலிருந்து மற்றொரு ஓடை வைரமாக வெளிவந்து, அது நீதியென்று, முற்றிலும் நீதியென்று அழைக்கப்பட்டது. இப்பொழுது, அந்தக் காரணத்தினால்தான் நாம் நியாயப்பிரமாணத்தை உடையவர்களாக இருக்க வேண்டியிருந்தது. அந்தக் காரணத்தினால்தான் நியாயப்பிரமாணம் நியாயத்தீர்ப்பை உடையதாய் இருக்கவேண்டியுள்ளது. எந்த நியாயத்தீர்ப்பும் நியாயப்பிரமாணத்தை பின் தொடரவில்லையென்றால், நியாயப்பிரமாணம் எந்த நன்மையையும் செய்யாது. நியாயத்தீர்ப்பு நியாயப்பிரமாணத்தினால் நிறைவேற்றப்பட்டபோது, அது மரணத்தை கொண்டு வந்தது. எனவே அதற்குரிய அபராதத்தைத் தேவனைத் தவிர வேறொருவராலும் செலுத்த முடியாதிருந்தது. அவர் நம்முடைய மரணத்திற்குரிய அபராதத்தைச் செலுத்தினார், நாம் அவர் மூலமாக தேவனுடைய நீதியாகும்படிக்கு நம்முடையப் பாவங்களை அவர்மேல் ஏற்றுக் கொண்டார். 128 இப்பொழுது, இந்த மகத்தான ஒளிகள் மகத்தான ஆவியின் கதிர்களை பிரகாசித்தன; அன்பு, சமாதானம், அங்கிருந்ததெல்லாம் அவ்வளவுதான். எந்த வேதனையும் அங்கில்லாதிருந்தது, எந்த வெறுப்பும் அங்கில்லாதிருந்தது. எந்த துர்க்குணமும் இல்லாதிருந்தது. எனவே அது இந்த ஊற்றிலிருந்து வந்திருக்க முடியாது. அது யேகோவாயிருந்தது. அது யேகோவா தேவனாயிருந்தது. இப்பொழுது, வேத பண்டிதர்கள் கூறுவது போல, அதிலிருந்து ஒர் ஆவிக்குரிய சரீரம் புறப்பட்டுச் சென்றது, அது ஆவிக்குரியப் பிரகாரமாக “லோகாஸ்” என்று அழைக்கப்பட்டது. அந்த லோகாஸ் தேவனிடத்திலுருந்து புறப்பட்டுச் சென்றது. அது விவரிப்பதற்கு கடினமாயுள்ளது, ஆனால் அது தேவனின் ஒரு பாகமாயிருந்தது. 129 இப்பொழுது, இங்கே இதுதான் சம்பவித்தது. ஓ, என்னை மன்னிக்கவும். நான்—நான்—நான் இதன் பேரில் புரிந்துகொள்கிறேன், நான் அதை எங்கே நேசிக்கிறேன் என்பதை இது என்னை புரிந்துகொள்ளும்படிச் செய்கிறது. புரிகிறதா? லோகாஸ், இந்த மகத்தான ஊற்று, இந்த மகத்தான ஆவியின் ஊற்றிற்கு துவக்கமும், முடிவும் இல்லாதிருந்தது. இது சிருஷ்டிப்பில் மகத்தான ஆவியின் ரூபத்தில் துவங்கி, அதிலிருந்து லோகாஸாய் புறப்பட்டுச் சென்ற தேவ குமாரனாய் இருந்தது. அதுவே காணக்கூடிய ரூபத்திலிருந்த ஆவியாயிருந்தது. அது ஒர் ஆவிக்குரிய சரீரமாய் இருந்தது, அது ஒரு சரீரம் என்று பொருள்படுகிறது, அந்தச் சரீரம் ஒரு மனிதனைப் போன்றிருந்தது. 130 அவர் கன்மலையண்டைக் கடந்துபோகும்போது,…மோசே அதைக் கண்டான். அப்பொழுது அவன் அதை நோக்கிப் பார்த்து, “அது மனிதனுடையப் பின்பாகத்தைப் போன்று காணப்பட்டது” என்று கூறினான். நாம் இங்கே மரிக்கும்போது, நாம் அதேவிதமான சரீரத்தையேப் பெற்றுக்கொள்கிறோம். “பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.” அதுவாகத்தான் அது இருந்தது. அது ஆவிக்குரிய சரீரத்திலிருந்த தேவ குமாரன் ஆகும். அந்த குமாரன், அந்த லோகாஸ், மாம்சமானார், ஏனென்றால் நாம் மாம்சத்தில் இருந்தோம். ஆவிக்குரிய சரீரம், அந்த லோகாஸ், இங்கே நமக்கு மத்தியிலே மாம்சமானார். அது அந்த முழு ஊற்றும் அவருக்குள் வாசம்செய்த வாசஸ்தலமேயல்லாமல் வேறொன்றுமாயிருக்கவில்லை. ஓ, உங்களுக்கு அது புரிகிறதா? அங்குதான் அது உள்ளது. அதற்குள் இருந்த ஒருவர் அவரே… 131 இங்கே பாருங்கள். இப்பொழுது நாம் துரிதமாக எபிரேயர் நிருபம் 7-ம் அதிகாரத்திற்கு ஒரு நிமிடம், தேவனுக்குச் சித்தமானால், கிருபையைக் குறித்துப் பார்க்கத் திருப்புவோம். அது இங்கே என்னவாய்க் காணப்படுகின்றது என்பதைக் காண்போமாக. ஆபிரகாம்! நமக்கு இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது? நமக்கு பத்து நிமிடங்கள் மாத்திரமே உள்ளது. சரி. நாம் இதை அறிந்துகொள்வோம், அதன்பின்னர் கர்த்தருக்குச் சித்தமானால், நாம் அதை அடுத்த, அதற்கடுத்த அல்லது ஞாயிற்றுக் கிழமை முடித்துவிடுவோம். 132 ஆபிரகாம் இராஜாக்களை முறியடித்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தான். இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும்… அது யார் என்றும், சாலேம் என்னவாய், எங்கேயிருந்தது என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? எருசலேம். …சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர் கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான். கவனியுங்கள். இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம். இவன் தகப்பனும் தாயும் வம்ச வரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல்… 133 சாலேமிலுருந்து ஒரு ராஜா வந்து, ராஜாக்களை முறியடித்து வந்த ஆபிரகாமைச் சந்தித்தார். இந்த ராஜாவுக்கு தகப்பனும் இல்லை, தாயும் இல்லை, நாட்களின் துவக்கமும், ஜீவனின் முடிவுமுடையவராயில்லாமலிருந்தார். அப்படியானால் ஆபிரகாமை சந்தித்தது யார்? இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். அவருக்கு தகப்பன் இல்லாதிருந்தது; அவருக்கு தாயும் இல்லாதிருந்தது. அவருக்கு நாட்களின் துவக்கம் என்பதே அவருக்கு ஒரு போதும் இல்லாதிருந்தது. அவருக்கு ஜீவனின் முடிவு எப்போது என்ற ஒரு நேரமே கிடையாது. ஆகையால் அந்த அதே சாலேமின் ராஜா இன்றைக்கு ஜீவிக்க வேண்டியவராயிருக்கிறார். ஆமென். உங்களுக்கு அது புரிகிறதா? அது அந்த ஆவிக்குரிய சரீரத்தில் இருந்த தேவ குமாரனாயிருந்தது. சாலேம் என்பது என்ன? அந்த எருசலேம் மேலே உள்ளது. அந்த ஆபிரகாம் ஆசீர்வதிக்கப்பட்டு. தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்தை கண்டறிய தேடி முயற்சித்துக் கொண்டிருந்தான். அவன் வெள்ளாட்டுத் தோலையும், செம்மறியாட்டுத் தோலையும் போர்த்திக் கொண்டு, எங்கும் அலைந்து திரிந்து, குறைவையும், துன்பத்தையும் அனுபவித்து, தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள ஒரு நகரத்தை தேடிக்கொண்டிருந்தான். அவன் ராஜாக்களை முறியடித்து வரும்போது அந்த சாலேம் ராஜாவைச் சந்தித்து, கொள்ளையிட்ட எல்லாவற்றிலிமிருந்தும் பத்தில் ஒன்றை அவருக்கு தசமபாகமாக செலுத்தினான். ஆமென். அது அவரே. ஓ, சகோதரன் பிரான்ஹாம், அது அவராயிருந்தது. அது அவரே. ஆபிரகாம் அவரை மீண்டும் கண்டான். ஒரு நாள் அவன் கூடாரத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது அவன் அங்கே தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, மூன்று புருஷர் வருவதைக் கண்டான். 134 ஒரு கிறிஸ்தவனைக் குறித்த ஏதோ ஒரு காரியம் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். அதாவது அவன் அதைக் காண்கிற போது, அவன் அதை ஆவியில் அறிந்துகொள்கிறான். அவன்…அவன் அதை அறிந்துகொள்கிறான். அதைக் குறித்து ஏதோ ஒர் ஆவிக்குரிய காரியம் உண்டு. ஆவிக்குரிய காரியங்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் நிதானிக்கப்படுகின்றன. உங்களுக்கேத் தெரியும். ஆம், அவன் உண்மையாகப் பிறந்திருந்தால், அவனால் அதைக் கூற முடியும். “என் ஆடுகள் என் சத்ததிற்குச் செவிகொடுக்கிறது”. 135 எனவே அங்கே ஏதோ ஒரு காரியம் இருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். ஆகையால் அவன் எதிர்கொண்டு ஓடி, “என் ஆண்டவரே உள்ளே வந்து, அமர்ந்து, சற்று இளைப்பாறும். நான் உங்களுக்கு கொஞ்சம் அப்பம் கொண்டு வருகிறேன். நான் உங்கள் பாதத்தைக் கழுவட்டும். நீங்கள் ஓய்வெடுத்துவிட்டு, பின்னர் உங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள், ஏனென்றால் இதற்காகவே அடியேன் இடம் வரைக்கும் வந்தீர்கள்” என்றான். வறண்ட நிலத்தில், கடினமான பாதையை, கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலருடைய வழியை தெரிந்துகொண்டான். லோத்து வளமாய் வாழ்ந்து கொண்டிருந்த, அவனுடைய சகோதரனின் மகனாய் இருந்தான். ஆனால் அவனோ பாவத்தில் வாழ்ந்துகொண்டிருந்தான். அந்தவிதமாகத்தான் அதிக செழுமை உற்பத்தி செய்கிறதோ பாவமாய் உள்ளது. 136 ஆகையால் ஆபிரகாம் அவர்களை அழைத்து வந்து, பின்னர் அவன் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அவர்களுடைய கால்களைக் கழுவினான். பின்னர் அவன் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, அதை அடித்து, ஒரு வேலைக்காரனிடம் அதை சமைக்கும்படிக்குக் கொடுத்தான். அடுத்து சாராளிடம், “சாராளே, மெல்லிய மாவெடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு” என்றான். பிசைதல் என்பது எதைப் பொருட்படுத்துகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அம்மா அவர்கள் முன்பெல்லாம் ஒரு விதமான பழைய அப்பஞ்சுடும் தட்டு போன்ற ஒன்றை வைத்திருந்ததை நீங்கள் அறிவீர்கள். அப்பொழுது தாயார் அதை மாவை வைக்கும் மரப்பீப்பாயில் வைத்திருந்தார். நீங்கள் எப்போதாவது ஒரு மாவு சலிக்கும் சல்லடையை பார்த்திருக்கிறீகளா? நீங்கள் வைத்திருந்த அந்தக் கனமான சல்லடையில் மாவினைக் கொட்டி சலித்தெடுப்பதை நீங்கள் அறிவீர்கள். அநேக முறை தாயார் அவ்விதம் செய்ததை நான் பார்த்திருக்கிறேன். அந்தத் தட்டில் ஒரு சிறு திரைச் சீலையை தொங்கவிடும் கம்பியினை வட்டமாக வளைத்து வைத்து அதற்குள்ளாக சலித்தெடுத்த மாவினை எடுத்து ஒன்று திரட்டி, உருட்டி அதை வட்டவடிவத்தில் முன்னாகவும், பின்னாகவும் தட்டி சுடுவதற்கு எடுத்து வைப்பார்கள். அப்பொழுது நாங்கள் சோள ரொட்டியை சுடுவதற்கான மாவினை அரைக்க பழைய கிரிஸ்ட் அரவை தொழிற்சாலைக்கு செல்ல வேண்டும். அங்கு மிகப் பெரிய பல்சக்கரங்கள் கொண்ட கனமான பழைய இரும்பு சக்கரங்கள் இருந்ததை நீங்கள் அறிவீர்கள். அதில் நீங்கள் மரக் கட்டைகளையும் அறுக்கலாம். 137 ஆகையால் அப்பொழுது அவள், “துரிதமாக கொஞ்சம் மாவெடுத்துப் பிசைந்தாள். பின்னர் அதை அடையாகத் தட்டி அடுப்பின் மீது வைத்து துரிதமாக அப்பங்களாக சுட்டெடுத்தாள். அவர்கள் பசும் பாலைக் கறந்து, கொஞ்சம் பாலைக் கொண்டு வந்தனர். அவர்கள் அதனைக் கடைந்து வெண்ணையை எடுத்தனர். அதன்பின்னர் அவர்கள் சென்று கன்றைக் கொன்று கொஞ்சம் மாமிசத்தைக் கொண்டு வந்து, அதை வறுத்தனர். மோரையும், ரொட்டியையும் கொண்டு வந்து, அவர்கள் அந்த சூடான அப்பத்தின் மீது கொஞ்சம் வெண்ணையை வைத்து தடவினர். ஓ, அது உண்மையாகவே நன்றாயிருக்கும். அவர்கள் வெண்ணையை அந்த அப்பத்தின் மீது தடவினர். அவன் அதை எடுத்துக் கொண்டுபோய், இந்த மூன்று புருஷர்களுக்கு முன்பாக வைத்தான். 138 அவர்கள் புசித்துக் கொண்டிருக்கையில், அவர்கள் சோதோமை நோக்கியவாறு பார்த்துக் கொண்டிருந்தனர். அதன்பின்னர் கொஞ்சங்கழித்து, அவர்கள் எழுந்து நடந்து செல்லத் துவங்கினர். அப்பொழுது அவன், ஆபிரகாம், “நீர் செய்யப் போவதை எனக்கு மறையாதேயும்” என்றான். 139 “நான் செய்யப் போவதை என்னால் உனக்குக் கூறாமல் மறைக்க முடியாது. நான் அங்கே போய்க் கொண்டிருக்கிறேன். சோதோமின் பாவங்கள் என் செவியில் வந்து எட்டியுள்ளன” என்றார். யார் அந்த மனிதன்? தன்னுடைய ஆடை மீது முழுவதும் தூசி படிந்தவராய், அங்கே அமர்ந்து ஒரு கன்றுக்குட்டியின் மாம்சத்தைப் புசித்து, பசுவின் பாலைக் குடித்து, அப்பத்தையும், வெண்ணையையும் புசித்தார். இந்த விநோதமான நபர் யார்? இரண்டு, இல்லை அவர்கள் மூன்று பேராய் அங்கே அமர்ந்திருந்தனர். அவருடைய ஆடை மீது முழுவதும் தூசிகள். ஓ, ஆம், “நாங்கள் ஒரு தூர தேசத்திலிருந்து வருகிறோம்”. ஆம், தூரத்திலிருந்தே வருகிறோம். ஆகவே அவர் கூறினார்…நல்லது, அவர்கள் யாராயிருந்தனர்? 140 அவர், “நான் செய்யப் போவதை ஆபிரகாமிற்கு மறைக்க முடியாது, அவன் பூமியின் சுதந்தரவாளியாயிருக்கிறான் என்பதைக் காண்கிறேன்” என்றார். ஆமென். “நான் என்னுடைய இரகசியங்களை வெளிப்படுத்துவேன்,” வேறு வார்த்தைகளில் கூறினால், “பூமியின் சுதந்தரவாளிகளாயிருப்பவர்களுக்கு” என்பதாகும். அங்கேதான் சபையானது இன்றைக்கு இருக்க வேண்டியதாயுள்ளது. அது உண்மை. தேவனுடைய இரகசியங்களை புரிந்துகொண்டு, எப்படி உங்களை அடக்கிக் கொள்ள வேண்டும், செயல்பட வேண்டும், என்ன செய்ய வேண்டும், எப்படி நடக்க வேண்டும், எப்படி ஜீவிக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். நாம் பூமியின் சுதந்தரவாளியாயிருக்கிறோம். சரி. அவர் அதை உங்களுக்கு வெளிப்படுத்துகிறார். ஏனென்றால் அவர் எந்தக் காரியத்தையும் மறைக்கமாட்டார். அந்தக் காரணத்தினால்தான் நாம் இந்தக் காரியங்கள் நிறைவேறுவதை கவனித்துக் கொண்டிருக்கிறோம். உலகமோ, “ஆ, அது ஒரு கூட்ட மதவெறியர்” என்று கூறுகிறது. அவர்கள் அதைக் கூறட்டும். பூமியின் சுதந்திரவாளியோ இந்தக் காரியங்களை அறிந்திருக்கிறான். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] …அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். அவர் தம்முடைய இரகசியங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, அதை அவர்களுக்கு வெளிப்படுத்தி, என்ன செய்ய வேண்டும் என்றும், எப்படி ஜீவிக்க வேண்டும் என்றும், உலகத்தின் காரியங்களை எப்படி விட்டுவிட வேண்டும் என்றும், எப்படி தேவபக்தியாய் நடந்து, எப்படி தேவபக்தியாய் ஜீவித்து, இந்த உலகத்தில் அவரோடு கூட எப்படி சஞ்சரிக்க வேண்டும் என்றும் அவர்களுக்குக் காண்பிக்கிறார். உலகம் என்ன கூற விரும்புகிறதோ, அதையே அவர்கள் கூறட்டும். 141 ஆகையால் அவர், “என்னால் இந்த இரகசியத்தை ஆபிரகாமுக்கு மறைத்து வைக்கமுடியாது, ஏனென்றால், அவன் பூமியின் சுதந்தரவாளியாயிருப்பதைக் காண்கிறேன்” என்றார். ஆனாலும் அவர், “நான் சோதோமை அழிக்கப் போகிறேன். நான் அழிக்கப் போகிறேன்” என்றார். 142 “திருவாளரே, நீர் என்ன செய்யப் போகிறீர்? நீர் எங்கிருந்து வருகிறீர்? இவை யாவையுங் குறித்து என்ன?” 143 அவர், “ஆபிரகாமே, மற்றொரு காரியத்தையும் அறிந்துகொண்டேன். நான் உனக்கு அளித்த இந்த வாக்குத்தத்திற்காக நீ இருபத்தைந்து ஆண்டுகள் காத்திருந்திருக்கிறாய். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே நீ இந்த குழந்தைக்காக எல்லா விளையாட்டு பொருட்களையும், துணிகளைத் தைக்கும் ஊசிகளையும், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் வாங்கி வைத்துவிட்டாய். நீயோ இன்னமும் என் பேரில் காத்துக்கொண்டிருக்கிறாய். இப்பொழுது நான் கிட்டத்தட்ட உற்பவகாலத் திட்டத்தில், உற்பவகாலத் திட்டத்தின்படியே உன்னிடத்திற்கு திரும்பவருவேன். அடுத்த மாதம் நான் உன்னோடு இருப்பேன்” என்றார். 144 சாராளோ பின்பக்கமாக கூடாரத்தில் இருந்தாள். இந்த மனிதர் தன்னுடைய முதுகை கூடாரப் பக்கமாகத் திருப்பியிருக்க, இந்தவிதமாக ஆபிரகாமோடே பேசிக்கொண்டிருந்தார். சாராளோ, “ஹூ!” என்று நகைத்துவிட்டாள். 145 அப்பொழுது அவர், “சாராள் நகைத்தது என்ன? என்றார். ஓ-ஊ-ஊ! அதைக் குறித்து எப்படி? அது முற்றிலும் ஒரு மனோவசியமாயிருந்தது, அது அவ்வாறிருந்ததல்லவா?” என்கிறார்கள். அவர் “சாராள் நகைத்தது என்ன?” என்றார். அதற்கு சாரளோ, “இல்லை. நான் நகைக்கவேயில்லை” என்றாள். 146 ஆனால் அவரோ, “ஓ, ஆம், நீ நகைத்தாய்” என்றார். அவள் பயமடைந்து விட்டாள். அவள் நடுங்கிக் கொண்டிருந்தாள். அவள் பின்பக்கமாக இருந்த கூடாரத்தில் என்ன செய்துக்கொண்டிருந்தாள் என்பதை அறிந்திருந்த அவர் யார்? அது இன்றைக்கு நம்மோடு இருக்கிற அதே மாறாத தேவனே. அதே ஒருவர். அவர் அதைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். புரிகிறதா? உங்களுக்கு தேவை இருக்கும்போது அவர் அதை வெளிப்படுத்துகிறார். புரிகிறதா? 147 “நீ எதைக் குறித்து நகைத்தாய்?” பாருங்கள், அவருடைய முதுகு அதற்கு பின்பக்கமாக திரும்பியிருந்தது. “கூடாரப் பக்கமாக அவருடைய முதுகு திரும்பியிருந்தது” என்று வேதம் கூறியுள்ளது. ஆனால் அவர் அதை அறிந்திருந்தார். அவள் அங்கே பின்னால் இதைத் தான் செய்துகொண்டிருந்தாள் என்பது உங்களுக்குப் புரிகிறதா? எனவே அவர், “நான் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்” என்றார். 148 இந்த விநோதமான நபர் யார்? என்ன சம்பவித்தது என்று உங்களுக்குத் தெரியுமா? பின்னர் அவர் அங்கிருந்து நடந்து சென்று மறைந்துவிட்டார். அது சர்வ வல்லமையுள்ள தேவன், யோகோவா, அந்த மகத்தான ஊற்று, அந்த ஆவிக்குரிய சரீரம், அந்த லோகாஸ் என்று வேதம் கூறியுள்ளது. 149 கொஞ்சங் காலத்திற்கு முன்னர் ஒரு பிரசங்கியார் என்னிடத்தில், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, அது தேவனாயிருந்தது என்று நீர் உண்மையாகவே கருதுகிறீரா? நீர் அவ்வாறு கருதுகிறீரா?” என்று கேட்டார். 150 அதற்கு நான், “அது தேவன், ஏலோஹீம் என்று வேதம் கூறியுள்ளதே” என்று கூறினேன். அவர் சர்வ வல்லமையுள்ள தேவன், எல்ஷடாய், அது உண்மை, பெலனளிப்பவர், திருப்திபடுத்துபவர். ஆமென். 151 ஓ, நான் பக்திப் பரவசமடைகிறேன். இப்பொழுது அவர் இங்கே இருக்கின்றபடியால், அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். இங்கே இருப்பது யார் என்பதை நான் காண்பிக்கப் போகிறேன், அதன்பின்னர் குமாரன் யாராயிருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அவர் “இயேசு” என்ற மானிட நாமத்தை உடையவராயிருந்ததற்கு முன்னர் இருந்த இயேசுவாகும். 152 அங்கே அந்த நாளின் ஊற்றண்டையிலே நின்றனர். அவர்கள் எல்லோரும், “வனாந்திரத்திலிருந்து வந்த தண்ணீரைப் பருகிக்கொண்டிருந்தனர்” என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர், “அவர்கள் மன்னாவைப் புசித்துக்கொண்டிருந்தனர்” என்றார். மேலும் அவர்கள், “எங்கள் பிதாக்கள் வனாந்திரத்தில் நாற்பது வருட காலமாய் மன்னாவைப் புசித்தனர்” என்றனர். 153 அதற்கு அவரோ, “அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்கள்” என்றார். மேலும் அவர், “வானத்திலிருந்து, தேவனிடத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம் நானே. இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் ஒருபோதும் மரிப்பதில்லை” என்றார். 154 அவர்கள், “எங்கள் பிதாக்கள் எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், வனாந்திரத்தில் அவர்களோடே கூடச் சென்ற ஞானக் கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்” என்றனர். 155 அவர், “நானே அந்தக் கன்மலை” என்றார். மகிமை! பரிசுத்த யோவான் 6-ம் அதிகாரம். “ஏன்?” அவர்கள் “என்ன?” என்று கேட்டனர். “ஆம், அது உண்மையே” என்றார். 156 “ஏன்?” அவரே கூறினார்…நீங்கள்…அவர்கள், “உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே” என்றனர். நிச்சயமாகவே, அவருடைய பணி அவரை சற்று வயதானவரைப் போன்று காணப்படச் செய்துவிட்டது. ஆனால் அவரோ முப்பது வயதுடையவராய் மாத்திரமே இருந்தார். அவர்கள், “நீர் இன்னமும் ஐம்பது வயது கூட பூர்த்தியாகாத ஒரு மனிதனாயிருக்கிறீர். அதே சமயத்தில் எண்ணூறு அல்லது தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மரித்துப் போய்விட்ட ஆபிரகாமை நீர் கண்டதாகக் கூறுகிறீரே. எனவே நீர் ஒரு பிசாசு என்பதை நாங்கள் இப்பொழுது அறிந்துள்ளோம்” என்றனர். 157 அதற்கு அவரோ, “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” என்றார். அதோ அவர் இருக்கிறார். நான் இருக்கிறவராக இருக்கிறேன் என்று கூறினவர் யாராயிருந்தார்? எல்லா தலைமுறைக்குமான ஒரு நிரந்தர நாமம். அது… “நான் இருக்கிறவராக இருக்கிறேன்” என்று எரிகிற முட்செடியில் இருந்த அக்கினி ஸ்தம்பமாய் இருந்தது. அவர் இங்கே உண்டுபண்ணின அந்த ஆவிக்குரிய சரீரமாயிருந்து, தேவ குமாரன், நான் இருக்கிறவராக இருக்கிறேன், யேகோவா என்று அழைக்கப்பட்டார். 158 தோமா, “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும்” என்றார். 159 அதற்கு அவர், “இவ்வளவு காலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா?” என்று கேட்டார். மேலும், “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, ‘பிதாவை எங்களுக்குக் காண்பியும்’ என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? என்று கேட்டார். நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். என் பிதா எனக்குள்ளே வாசமாயிருக்கிறார். நான் குமாரன் என்றழைக்கப்படுகின்ற ஒரு கூடாரமாயிருக்கிறேன். பிதாவானவர் எனக்குள் வாசமாயிருக்கிறார். இந்தக் கிரியைகளைச் செய்கிறது நானல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற என் பிதாவே இவைகளைச் செய்கிறார். அவரே கிரியைகளைச் செய்கிறார், நானல்ல”. 160 இப்பொழுது அங்கே பின்னாக நின்று மோசே அவரைக் கண்டான், அவருடைய பின்பாகத்தைக் கண்டு, “அது ஒரு மனிதனுடைய பின்பாகம்போன்று காணப்பட்டது” என்றான். அது தேவனிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற லோகாஸ். 161 அப்பொழுது என்ன சம்பவித்தது? இது தேவனாயிருந்தது. அந்தக் காரணத்தினால்தான் அவர் லோகாஸிலிருந்து மாம்சமாக வேண்டியதாயிருந்தது…என்ன? நீங்கள் அதை எப்படி…அதற்கு என்ன சம்பவித்தது? அதற்குமுன் ஐந்து நிமிடங்கள், அவர் ஒரு…அவர் லோகாஸாயிருந்தார். ஆனால் அவர் என்ன செய்தார்? அவர் அங்கு சென்றடைந்து… 162 இப்பொழுது, நம்முடைய சரீரங்கள் உலகத்தின் பதினாறு வித்தியாசமான மூலக்கூறுகளிலிருந்து உண்டாக்கப்பட்டிருக்கின்றன. நாம் அதை அறிவோம். அது பொட்டாஷ், கொஞ்சம் கால்சியம், பெட்ரோலியம், இயலுலக ஒளி மற்றும் அணுக்கள் போன்றவற்றிலிருந்து உண்டாக்கப்பட்டிருக்கின்றன. எல்லாம் ஒன்றாக சேர்க்கப்பட்டு, இந்த சரீரம் உருவாகியுள்ளது, இது பூமியின் மண்ணிலிருந்து தோன்றியுள்ளது. நீங்கள் ஆகாரம் புசிக்கிறீர்கள். நீ ஆகாரம் புசித்தவுடன், அது திரும்பவும் எந்த மண்ணிலிருந்து உண்டானதோ, அந்த மண்ணிற்கே திரும்பி விடுகிறது. அது சரியாக அங்குதான் செல்கிறது. உங்களுடைய மாம்சம், உங்களுடைய மாம்சத்தைப் பொருத்தமட்டில் நீங்கள் ஒரு குதிரையிலிருந்தோ அல்லது ஒரு பசுமாட்டிலிருந்தோ அல்லது வேறெதிலிருந்தோ வித்தியாசப்பட்டது அல்ல. அது வெறுமென அப்படியே மாம்சமாயிருக்கிறது. 163 பையனே, நீ மாம்சத்தை மகிமைப்படுத்துகிறாய்; ஆனால் என் சகோதரனே, அந்த ஆவி அங்கு ஒர் ஆத்துமாவை உடையதாய் இருக்கிறது. அது உண்மை. ஆனால் உங்களுடைய மாம்சம் மிருகத்தைப் போன்று பூமியின் மண்ணிலிருந்து உண்டானதாயிருக்கிறது. உங்களுடைய மாம்சம் ஒரு மிருகமேயல்லாமல் வேறொன்றுமில்லை. நீங்கள் மாம்சத்தின்படி இச்சிப்பீர்களேயானால், நீங்கள் காண்கிற காரியங்கள், ஸ்திரீயை இச்சையோடு பார்ப்பீர்களேயானால், இந்த எல்லா வித்தியாசமான காரியங்களையும் இச்சிப்பீர்களேயானால், அது இன்னமும் மிருகமாகவேயுள்ளது. அது உண்மை. அது சரியே. நீங்கள் அதைச் செய்யக் கூடாது. தேவ ஆவியானவர் உங்களை வழிநடத்தி, அதைப் பார்க்கிலும் அதிக தெளிவான ஒன்றின் மேல் வைப்பார். அது முற்றிலும் உண்மை. 164 இப்பொழுது, இங்கே, இந்த மகத்தான ஆவிக்குரிய சரீரம் அங்கே நின்றுகொண்டிருக்கிறது. என்ன? அந்த மகத்தான யோகாவா தேவன், அவர் என்ன கூறினார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் கரத்தை நீட்டி, ஒரு கைப்பிடி நிறைய அணுக்களை எடுத்து, கொஞ்சம் ஒளியை எடுத்து, அதை இந்த விதமாக அவருக்குள் ஊற்றி, “வ்வூயு” என்று ஊதினபோது, ஒரு சரீரம் அதற்குள்ளாக அடியெடுத்து வைத்தது. அவ்வளவுதான். 165 அவர். “அந்த மகத்தான பிரதான தூதனாகிய காபிரியேலே, இங்கே வா” என்றார். அவர் “வ்வூயு” என்று ஊதினார். “அவன் அப்பொழுது அதற்குள் அடியெடுத்து வைத்தான். 166 அவர் வலது பக்கத்தில் இருந்த தூதனை நோக்கி, “மிகாவேலே, இங்கே வா” என்றார். பின்னர், “வ்வூயு” என்று…அவர் ஊதி, “நீ அதற்குள் அடியெடுத்து வை” என்றார். 167 தேவனும், இரண்டு தூதர்களும் இங்கே மாம்ச சரீரத்தில் நடந்து சென்று, ஒரு பசுவின் பாலைக் குடித்து, பாலிலிருந்து எடுக்கப்பட்ட வெண்ணெய்யைப் புசித்துவிட்டு, கொஞ்சம் அப்பத்தையும், கன்றின் மாம்சத்தையும் புசித்தனர். இரண்டு தூதர்களும் தேவனும். வேதம் அவ்வண்ணமாகக் கூறியுள்ளது. அது ஆபிரகாம் இராஜாக்களை முறியடித்து திரும்பி வந்தபோது, அவனைச் சந்தித்த அந்த மெல்கிசேதேக்கு ஆகும். அது தேவ குமாரனாகும். 168 இங்கே எபிரேயர் 7-ம் அதிகாரத்தில் தொடர்ந்து மேற்கொண்டு பார்ப்போமேயானால், “தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய்” என்று கூறப்பட்டுள்ளது. அப்படித்தான் அவர் இருக்கிறார். அவர் எல்லாக் காரியங்களையும் தம்மாலே உண்டுபண்ணினார். அவர் அங்கே நடந்து சென்று, மண்ணிலிருந்து உண்டான அந்த சரீரத்தை மீண்டும் மண்ணாக்கிவிட்டு, மீண்டும் மகிமைக்குள்ளாக அடியெடுத்து வைத்துச் சென்று விட்டார். 169 தூதர்கள், அவர்கள் லோத்தையும், திருமதி.லோத்தையும் விடுவித்தவுடனே, அவள் தொடர்ந்து பின்னோக்கி பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவர்கள் மீண்டும் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று அவர் கூறினார். அதன்பின்னர் தூதர்கள் திரும்பவும் தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாகச் சென்று விட்டனர். 170 இப்பொழுது, இன்றிரவு நாம் சேவிக்கிற இந்த மகத்தான விசுவாசத்தில் நாம் என்ன ஒரு மகத்தான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம். ஜீவனுள்ள தேவன், யேகோவா, அக்கினி ஸ்தம்பம் நம்மோடு இருக்கிறார். அவர் தம்மை வல்லமையில், செயலில், பெரியதாகக் காண்பிக்கிறார். அவர்கள் அவருடைய புகைப்படத்தை எடுத்துக்கொள்ளட்டும், அதே யேகோவா. தேவனிடத்திலிருந்து வந்த தேவ குமாரன் திரும்பவும் தேவனிடத்திற்குச் சென்று, என்றென்றைக்குமாய் தம்முடைய சபையில் வாசம் செய்கிறார். அங்கேதான் அவர் இருக்கிறார். 171 அவர் நம்முடைய பெயர்களை தம்முடையப் புத்தகத்தில் எழுதி வைத்து, கடைசி நாளில் அவர் நம்மை எழுப்பப்போவதாக தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டார். “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு: அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.” 172 ஒரு கைப்பிடி நிறைய கால்சியம் மற்றும் சாம்பல் உப்பை கை நீட்டி எடுத்து, போ, “வூயூ” என்று ஊதி சிருஷ்டிக்க முடிந்த அந்த மாறாத ஒருவரிடத்தில் நீங்கள் மீண்டும் வந்திருக்கிறீர்கள். என்னுடைய பெயர் அவருடைய புத்தகத்தில் உள்ளது. ஓ-ஓ! ஓ-ஊ-ஊ-ஊ! என்னுடைய தோள்பட்டைகள் எவ்வளவு தான் தொங்கிக்கொண்டே போய், நான் எவ்வளவு வயோதிகனானாலும் நான் எதற்கு கவலைப்படவேண்டும்? நிச்சயமாக கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு துளியும் கவலைப்பட வேண்டியதில்லை. 173 சகோதரன் மைக், உங்களுடைய இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக, சகோதரனே, இந்நாட்களில் ஒன்றில் பெரிய எக்காளம் முழங்கும்போது, அந்த யோசேப்பு வருவார். அல்லேலுயா! அப்பொழுது அவர், “பிள்ளைகளே!” “வ்வூயு” என்பார். அப்பொழுது நீங்கள் அவர் இருக்கிறவண்ணமாகவே இருப்பீர்கள். என்றென்றைக்கும் வாலிபமாயிருப்பீர்கள், வயோதிகம் கடந்து போகும், சுகவீனம், தொல்லைகள், துக்கங்கள் மறைந்துபோயிருக்கும். ஜீவனுள்ள தேவனுக்கே மகிமை உண்டாவதாக! 174 இன்றைக்கும் தம்முடைய குமாரன் மூலமாய்ப் பேசுகிறவர் அவரே. “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் தம்முடைய குமாரன் கிறிஸ்து இயேசு மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்”. அவர் அழைத்திருக்கிற ஒவ்வொரு மனிதனுடைய இருதயத்திலும் அவர் பேசுகிறார். நீங்கள் எப்போதாவது அவருடைய சத்தத்தை உணர்ந்திருந்தால் அல்லது அவர் உங்களுடைய இருதயத்தைத் தட்டுவதைக் கேட்பீர்களேயானால், தயவு கூர்ந்து அதைப் புறக்கணித்து தள்ளிவிடாதீர்கள். நாம் ஜெபம் செய்வோமாக 175 பரலோகப் பிதாவே, இன்றிரவு, இந்த எபிரேய நிருபத்தின் துவகத்திலே, பவுல் எப்படி அந்த சுவிஷேங்களுக்குள்ளாகத் திரும்பிச் சென்றான் என்பதை அறிந்து கொள்ள நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். அவன் ஏதோ ஒன்றைக் கூறுவதைக் கேட்பதன் பேரிலோ அல்லது ஒர் அனுபவத்தின் பேரிலோ அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. சத்தியம் என்னவாயிருந்தது என்பதை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான். அவன் சுவிசேஷங்களுக்குள்ளாக திரும்பிச் சென்று…பழைய ஏற்பாட்டிற்குள்ளாக, அவர்களுக்கு பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷத்திற்குள்ளாகத் திரும்பி சென்றான். அங்கிருந்த எல்லா நிழல்களையும், மாதிரிகளையும் அவன் பழைய ஏற்பாட்டினூடாக நோக்கிப் பார்த்தான். அந்தக் காரணத்தினால்தான் நாங்கள் இன்றிரவு இந்த மகத்தான எபிரேய புத்தகத்தை பெற்றுக்கொண்டோம். கர்த்தாவே, நாங்கள் அதைக் காண்கையில், நாங்கள் அதை நேசிக்கிறோம். காலங்களினூடாக அது எரிக்கப்பட்டு, அது சிதறடிக்கப்பட்டு, அது அழிந்து ஒழிந்து போகும்படியாகவே முயற்சிக்கப்பட்டு வந்துள்ளது, ஆனால் அது மாறாமல் அதேவிதமாக செயல்படுகிறது. ஏனென்றால் நீர், “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” என்று கூறியிருக்கிறீர். 176 ஆகையால் அந்த சந்தேகக்காரர், ‘“பவுல் இதை எழுதினார்’ என்று ‘நீர் கூறினீர்’” என்று கூறுவார்கள். பவுல் அல்ல, ஆனால் பவுலுக்குள்ளிருந்த தேவன்; பவுலின் உட்புறத்தில் இருந்த அந்த சிருஷ்டிகரே எழுதினார். 177 தாவீதுக்குள்ளிருந்தது போலவே, தாவீது, “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்” என்றார். தேவ குமாரன் அந்த வார்த்தைகளை அந்தத் தீர்க்கதரிசியினிடத்திலிருந்து எடுத்துக் கொண்டு, நேராகப் பாதாளத்திற்குள்ளாகச் சென்றார். மேலும் அவர், “இந்தக் கூடாரத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்” என்று கூறினார். அவர் அதைச் செய்தார், ஏனென்றால் தேவனுடைய வார்த்தைத் தவறிப்போக முடியாது. அதின் ஒரு சிறு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போக முடியாது. இதற்காக, இந்த மகத்தான ஊரீம் தும்மீமிற்காக, கர்த்தாவே, இன்றிரவு எங்களுடைய அனுபவங்களை அறிந்துகொள்ள இங்குள்ள இந்த வேதாகமத்தின் மேல் வெளிச்சம் பிரகாசிக்கச் செய்கிறதற்காக நாங்கள் எவ்வளவாய் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் மீண்டும் பிறந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வோமாக! 178 அன்புள்ள தேவனே, இன்றிரவு இங்குள்ள ஒரு மனிதனோ அல்லது ஒரு ஸ்திரீயோ, பையனோ அல்லது பெண்ணோ ஒரு போதும் இதை சாட்சிப் பகராமலிருந்திருந்தால், அங்கே ஜீவன் இல்லாமலிருந்திருந்தால், எப்படி அவர்களால் கரத்தை உயர்த்தியிருக்க முடியும்? ஓ அவர்களோ, “எனக்கு ஜீவன் உண்டு” என்று கூறுகிறார்களே. 179 ஆனால் வேதமோ, “சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்” என்று கூறியுள்ளது. நீ ஜீவனையுடையவளாயிருக்கிறாய் என்று நீ கூறுகிறாய், ஆனால் நீ செத்தவள். வேதம் “நீ உயிரோடிருப்பதாக உரிமைகோருகிறாய்,” என்றும், “ஆனாலும் நீ செத்தாய். நீ ஐஸ்வரியவானென்றும், உனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் நீ சொல்லுகிறாய், ஆனால் நீ பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், நிர்வாணியும், குருடனுமாயிருக்கிறாய் என்பதை அறியாதிருக்கிறாய். அதை அறியாமலிருக்கிறாய்” என்று கூறியுள்ளது. கர்த்தாவே, அதுவே இன்றிரவு சபைகளின் நிலைமையாயுள்ளது. எப்படி அவர்கள் இந்த மகத்தான, விலையேறப்பெற்ற காரியங்களைத் தவறவிடுகிறார்கள். அந்த மகத்தான யோகோவா தேவனால், அவரால் மாத்திரமே உற்பத்தி செய்யமுடியும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்…அவர், “அந்தச் சிறிய மீன்களை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்” என்றார். எனவே அவர் அந்த மீனை எடுத்து ஏதோ ஒன்றை உண்டாக்க வேண்டியதாயிருந்தது. அது ஏதோ ஒரு காரியத்தைக் கொண்டு செய்யும்படியான, அது ஏதோ ஒரு காரியமாயிருக்கும்படியான உயிர்த்தெழுதலாயிருக்க வேண்டியதாயிருக்கிறது என்பதையே காண்பிக்கிறது. அவர் மீனை மாத்திரம் உண்டுபண்ணவில்லை, அவர் பொரித்த மீனை உண்டுபண்ணினார். அவர் சுட்ட அப்பத்தை உண்டுபண்ணினார். அவர் ஐந்து சிறு மீன்களைக் கொண்டு…ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையுங்கொண்டு ஐந்தாயிரம் பேரைப் போஷித்தார். ஓ, கர்த்தாவே, அது உம்முடைய கரங்களில் இருந்தது, அவர் சிருஷ்டிகராயிருந்தார். ஆனால் அவர் தம்முடைய கரத்தில் ஏதோ ஒன்றை உடையவராய் இருக்க வேண்டியதாயிருந்தது. தேவனே இன்றிரவு நாங்கள் எங்களையே உம்முடையக் கரங்களில் வைத்து, “ஓ, தேவனே, நான் இருக்கிறவண்ணமாக என்னை ஏற்றுக் கொள்ளும். இங்கே என்னுடைய வாழ்க்கையின் முடிவு வரும்போது, நான் மீண்டும் பிறந்திருக்கிறேன், உம்முடைய ஆவி என்னுடனே கூடச் சாட்சி பகர்ந்துள்ளது, நான் உம்முடைய குமாரன் அல்லது உம்முடைய குமாரத்தி என்று என்னுடைய ஆவியோடு சாட்சிக் கூறியுள்ளது என்பதை அறிந்து, எனக்குள்ளாக இருந்த இந்த நம்பிக்கையோடே நான் போகட்டும்” என்று கூறுவோமாக. அந்தக் கடைசி நாளிலே நீர் அவர்களை எழுப்புவீர். பிதாவே இதை அருளும். 180 நாம் நம்முடையத் தலைகளை வணங்கியிருக்கையில், எவரேனும் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “சகோதரன் பிராஹாம், ஜெபத்தில் என்னை நினைவு கூரும். தேவன் என்னை தெரிந்து கொள்ளும்படி நான் விரும்புகிறேன்…நான் இப்புவியை விட்டு கடந்து செல்லும் முன்பு, அவர் என்னுடைய பெயரைக் கூப்பிடுவார், நான் மறு உத்தரவு அருளுவேன் என்றும், அவர் என்னை அதிகமாக அறிந்திருப்பார் என்றும் அறிய விரும்புகிறேன்” என்று கூறுங்கள். மகனே, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக பெண்மணியே, உம்மை ஆசீர்வதிப்பாராக. வேறு யாரேனும் உண்டா? அப்படியே உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம், எனக்காக ஜெபியுங்கள்” என்று கூறுங்கள். அதை மட்டும் நாம் செய்வோம். வாலிபப் பெண்மணியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. 181 இப்பொழுது உங்களுடைய தலைகள் ஜெபத்தில் வணங்கியிருக்கையில், நான் இந்தப் பாடலின் ஒரு பல்லவியைப் பாடப்போகிறேன். இந்த உலகத்தினுடைய மாயையான ஐஸ்வரியங்களை இச்சியாதீர் அது அதிசீக்கிரத்தில் அழிந்து போகும். நித்தியமான காரியங்களின் பேரில் உங்களுடைய நம்பிக்கைகளைக் கட்டுங்கள், அவை ஒருபோதும் ஒழிந்து போகாது. தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள், தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள், நித்தியமான காரியங்களின் பேரில் உங்கள் நம்பிக்கைகளைக் கட்டுங்கள், தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். 182 இப்பொழுது அவள் இசைத்துக் கொண்டிருக்கையில், உங்களுடையத் தலை வணங்கியிருப்பதோடு, நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்தி, “ஆம், கர்த்தாவே, இங்கே என்னுடையது இருக்கிறது” என்று கூறுவீர்களா? அது என்ன செய்யும்? அது உங்களுக்குள்ளாக இருக்கிற உங்களுடைய ஆவியைக் காண்பித்து, ஒரு தீர்மானத்தை உண்டுபண்ணும். “கர்த்தாவே உம்முடையக் கரம் எனக்குத் தேவை” என்று கூறுங்கள். குட்டிப் பெண்ணே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. “நான் என்னுடையக் கரத்தை உயர்த்துவேன்”. இங்கு கீழே உள்ள குட்டிப் பெண்ணே, தேவன் உம்மை ஆசீர்வதிபாராக. தேனே, அது அருமையாயுள்ளது. நீங்கள் அதைச் செய்வதை காண தேவன் மகிழ்ச்சியாயிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்”. 183 “தேவனே, நீர் என்னுடைய கரத்தை பற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அந்த நாளிலே நான் உம்முடைய கரத்தில் இருக்க விரும்புகிறேன்; அதாவது நீர் அழைக்கும் போது, நான் வருவேன்”. ஆம், லாசரு வந்ததைப் போன்றே. சகோதரியே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நம்முடைய யாத்திரை முடிவுறும்போது, நீங்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இருந்து வந்திருந்தால், மகிமையில் உள்ள அழகான, பிரகாசமான உங்கள் வீட்டை உங்களுடைய ஆனந்த பரவசமடைந்த ஆத்துமா காணும். அப்படியானால் இப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள், தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள், நித்தியமான காரியங்களின் மேல் உங்களுடைய நம்பிக்கைகளைக் கட்டுங்கள், தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். 184 பரலோகப் பிதாவே, இந்தச் சிறு கூட்டத்தில் இன்றிரவு உம்முடைய மாறாத நித்தியமான கரத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று விரும்பி அநேகக் கரங்கள் மேலே உயர்த்தப்பட்டன. உம்மிடத்தில் என்ன ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருக்கிறீர்…நீர், “நான்…பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்து போகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவேன். அவைகள் ஒருபோதும் அழிந்து போக முடியாது, அவைகள் ஒருபோதும் நியாயத்தீர்ப்புக்கு வரமுடியாது. ஆனால் அவை நித்திய ஜீவனை உடையதாயிருக்கின்றன”. ஒரே ஒரு நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு. அது தேவனிடத்திலிருந்து மாத்திரமே வருகிறது. அது தேவனாயிருக்கிறது. நாங்கள் தேவனுடைய பாகமாகிவிட்டபடியால், நாங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம். தேவனுடைய ஆவி எங்களுக்குள்ளாக இருக்கும்போது, நாங்கள் தேவனைப் போல சிந்திக்கிறோம். நாங்கள் நீதியைக் குறித்தும், பரிசுத்தத்தைக் குறித்தும் சிந்திக்கிறோம். நாங்கள் அவருக்கு பிரியமாய் ஜீவிக்க முயற்சிக்கிறோம். 185 கர்த்தாவே, தங்களுடைய கரத்தை உயர்த்தின ஒவ்வொரு நபருக்குள்ளும் அந்த விதமான ஜீவன் உட்பிரவேசிக்க அருள்புரியும். தங்களுடையக் கரங்களை உயர்த்த வேண்டுமென்றிருந்து உயர்த்தாதவர்கள், நீர் அவர்களோடும் இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். பிதாவே இதை அருளும். யாத்திரை முடிவடையும்போது, ஜீவியம் முடிவுறும்போது, அந்த நாளிலே நாங்கள் அவரோடு சமாதனத்திற்குள் பிரவேசிப்போமாக. அங்கே ஒருபோதும் முதுமையே இருக்காது, சுகவீனமே ஒருபோதும் இருக்காது, தொல்லையே ஒருபோதும் இருக்காது. அந்நாள் வரை நாங்கள் சந்தோஷத்துடனும், மகிழ்ச்சியுடனும், அவரைத் துதிக்கும்படிக் காத்துக் கொள்ளும். நாங்கள் இதை அவருடைய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 186 விசுவாசிகளாகிய நீங்கள் எல்லோருமாக, இப்பொழுது நாம் நம்முடைய கரங்களை உயர்த்தி அந்த பல்லவியைப் பாடுவோமாக. தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள், தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். நித்தியமான காரியங்களின் பேரில் உங்கள் நம்பிக்கையைக் கட்டுங்கள், தேவனுடைய மாறாத கரத்தை பற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் அதை வாய்திறவாமல் மெளனமாய்ப் பாடுவோம். [சகோதரன் பிரான்ஹாம் தேவனுடைய மாறாத கரத்தை பற்றிக் கொள்ளுங்கள் என்ற பாடலை வாய்திறவாமல் மெளனமாய் பாடத் துவங்குகிறார்—ஆசி.] 187 நீங்கள் அதை பாடிக்கொண்டிருக்கையில், உங்களுக்கு அருகில் இருப்பவர்களிடத்தில், அருகில் இருப்பவரே, “தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக” என்று கூறுங்கள். உங்களுக்கு பக்கத்தில் அமர்ந்துள்ள யாரிடத்திலாவது கரத்தைக் குலுக்குங்கள். “தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக”. இப்பொழுது இரண்டு பக்கங்களிலுமுள்ளவர்களே அவ்வாறு செய்யுங்கள். இருபக்கங்களிலுமுள்ளவர்களே கரங்களைக் குலுக்குங்கள். “அருகில் இருப்பவரே, தேவன் உம்மை ஆசீவதிப்பாராக, தேவன் உங்களோடிருப்பாராக.” நித்தியமான காரியங்களின் பேரில் உங்களுடைய நம்பிக்கைகளைக் கட்டுங்கள். சகோதரன் டாக், அது அங்குள்ளது என்பதை நான் அறிவேன். சகோதரன் நெவில் நீண்ட காலத்திற்கு முன்பே நீர் அங்கு இருந்து வந்திருக்கிறீர் என்பதை நான் அறிவேன். இந்த யாத்திரை முடிவடையும் போது, இந்நாட்களில் ஒன்றிலே, அது சம்பவிக்கப் போகிறது. நாம் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாயிருந்து வந்திருந்தால், நாம் சகோதரன் ஸ்டூவர்ட் அவர்களை அங்கேக் காண்போம். மகிமையில் உள்ள பிரகாசமான, பிரகாசமான உங்களுடைய வீட்டை, உங்களுடைய ஆனந்த பரவசமடைந்த ஆத்துமா காணும். தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். செய்திக்கு பிறகு நான் ஆராதிக்க விரும்புகிறேன். தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். நித்தியமான காரியங்களின் பேரில் உங்களுடைய நம்பிக்கைகளைக் கட்டுங்கள், தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். காலமானது விரைவான சூழல் மாற்றங்களைக் கொண்டது, பூமியில் ஒன்றும் அசையாதவைகள் அல்ல, அசையாதவைகளே நிலைக்கும், நித்தியமான காரியங்களின் மேல் உங்களுடைய நம்பிக்கைகளைக் கட்டுங்கள் பற்றிக் கொள்ளுங்கள்… நாம் அவருடைய காட்சியைத் தெரிந்துகொள்வோமாக, அந்தப் புலப்படாத ஒருவர் இப்பொழுது நம்மத்தியில் இருக்கிறார். நாம் பாடுகையில், அவரை ஆராதிப்போமாக. தேவனுடைய மாறாத கரத்தை பற்றிக் கொள்ளுங்கள், தேவனுடைய மாறாத கரத்தை பற்றிக் கொள்ளுங்கள், நித்தியமான காரியங்களின் பேரில் உங்களுடைய நம்பிக்கைகளைக் கட்டுங்கள் தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். சமாதானம்! சமாதானம்! அற்புதமான சமாதானம், இப்பொழுது அவரை ஆராதிப்போமாக. இறங்கி வருகிறது… செய்தியானது முடிவுற்றுவிட்டது. இது ஆராதிப்பதாகும். ஆழங்காண முடியாத பேரலைகளின் அன்பில் என்றென்றுமாய் எங்கள் ஆவியின் மீது சைவாடும் என்றே நான் ஜெபிக்கிறேன் அவருக்குள்ளாக நனையுங்கள். சமாதானம்! சமாதானம்! அற்புதமான சமாதானம், இறங்கி வருகிறது… அந்த மகத்தான ஊற்று, அது திறந்துள்ளது. …பரத்திலிருந்து; ஆழங்கான முடியாத பேரலைகளின் அன்பில் என்றென்றுமாய் எங்கள் ஆவியின் மீது அசைவாடும் என்றே நான் ஜெபிக்கிறேன். அது ஏதோ ஒரு காரியத்தை செய்யவில்லையா? அற்புதமான சமாதனம், பரத்திலுள்ள நம்முடைய பிதாவினிடத்திலுருந்து இறங்கி வருகிறது, ஆழங்கான முடியாத பேரலைகளின் அன்பில் என்றென்றுமாய் எங்கள் ஆவியின் மீது அசைவாடும் என்றே நான் ஜெபிக்கிறேன் அதைக் குறித்த ஏதோ ஒரு காரியம், ஐஸ்வரியமாய், இனிமையாயிருக்கவில்லையா? 188 எண்ணெய் பூசி, ஜெபிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிற சுகவீனமான நபர் யாரேனும் உள்ளார்களா என்று வியப்புறுகிறேன். அப்படியிருந்தால் உங்களுடைய இடத்திலேயே இருங்கள். அங்கே சக்கர நாற்காலியில் உள்ள இந்தப் பெண்மணிக்கா? அவள் அங்கேயே இருக்கட்டும். நான் வந்து அவளுக்காக ஜெபிப்பேன். அவள் அந்த சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து வர வேண்டாம். வேறு யாரேனும் உண்டா? ஓ, ஆரதனையின் இந்த பாகத்தை நீங்கள் விரும்புகிறதில்லையா? தேவனுடைய பிரசன்னம் இங்கு உள்ளது என்பதை எத்தனைப் பேர் அறிந்து உணருகிறீர்கள்? அதைக் குறித்துதான் நான் பேசுகிறேன். அந்த மாறாத…நீங்கள்…இந்த விதமாக உணருகிறீர்கள்…எத்தனை பேர் சத்தமாய் கூச்சலிட வேண்டும் என்பது போன்று நீங்கள் உணருகிறீர்கள்? இப்பொழுது நாம் பார்ப்போமாக. நீங்கள் சத்தமிட வேண்டும் என்பது போன்ற ஒரு காரியத்தை உணருகிறீர்கள். புரிகிறதா? அது சமாதானம்! சமாதானம்! அற்புத சமாதானம், பரத்திலுள்ள பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; ஆழங்காண முடியாத பேரலைகளின் அன்பில் என்றென்றுமாய் எங்கள் ஆவியின் மீது அசைவாடும் என்றே நான் ஜெபிக்கிறேன் என் மேல் பிரகாசியும். 189 நாம் ஆராதிக்கையில், நாங்கள் இப்பொழுது வியாதியஸ்தருக்காக எண்ணெய் பூசி, அவர்களுக்காக ஜெபிக்கப் போகிறோம். பெண்மணியே நீங்கள் இந்த வழியாய் வரமாட்டீர்களா? 190 இது எதைப் பொருட்படுத்துகிறது? “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்.” இப்பொழுது ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருங்கள், அந்தப் பாடலை வாய்த்திறவாமல் மெளனமாய் பாடுங்கள். இயேசு வியாதியஸ்தரை சுகப்படுத்துவதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அவளுக்கு எண்ணெய் பூசுங்கள்.